ஈரோட்டில் வள்ளலார் 202வது பிறந்தநாள் விழா
Erode news- ஈரோட்டில் வள்ளலாரின் பிறந்தநாள் விழாவில் அன்னதானம் வழங்கப்பட்ட போது எடுத்த படம்.
Erode news, Erode news today- ஈரோட்டில் வள்ளலாரின் 202வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
சமரச சன்மார்க்க நெறிகளை வகுத்தவரும், பசிப்பிணி போக்க பாடுபட்ட ஞானியுமான வள்ளலார் ராமலிங்க அடிகள் பிறந்த தினம் ஆண்டுதோறும் அக்டோபர் 5ம் தேதி கொண்டாடப்படுகிறது. கடந்த 2021ம் ஆண்டு முதல் வள்ளலார் பிறந்த நாளான அக்டோபர் 5 தனிப்பெருங்கருணை நாள் எனக் கடைப்பிடிக்கப்படுகிறது.
இந்நிலையில், எல்லா உயிர்களும் இன்புற்று வாழவேண்டும் என்றும், வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் என்றும், கூறி சாதி சமயத்திற்கு அப்பாற்பட்டு மனித நேயத்தோடு வாழ வேண்டும் என்று கூறிய வள்ளலாருடைய 202வது பிறந்தநாள் விழா ஈதல் இதயம் அறக்கட்டளை மற்றும் டிஏஎப் அகடாமி ஈரோடு கிளையில் தனிப் பெருங்கருணை தின விழா கொண்டாடப்பட்டது.
இந்த விழாவில் ஈரோடு சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தின் தலைவர் பொன் சிவஞானம் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளிடையே சிறப்புரையாற்றினார். விழாவில் செயலாளர் தங்கபாண்டியன், பொருளாளர் அலெக்சாண்டர் மற்றும் ஈரோடு கனி மார்க்கெட் அனைத்து வியாபாரிகள் சங்க தலைவரும், செயற்குழு உறுப்பினருமான எஸ்.செல்வராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து நடைபெற்ற இவ்விழாவில் மாணவ, மாணவிகளுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. முடிவில் அமைப்பாளர் தேவி நன்றி கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu