ஈரோடு மாவட்டத்தில் 26 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி

ஈரோடு மாவட்டத்தில் 26 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி
X
ஈரோடு மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற 17-வது கட்ட தடுப்பூசி முகாமில் 26 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

ஈரோடு மாவட்டத்தில் 17-வது கட்ட மெகா தடுப்பூசி முகாம், 543 மையங்களில் நேற்று நடந்தது. இந்த முகாம்களில் 1.50 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

இம்முகாமில் 2,172 சுகாதார பணியாளர்கள் ஈடுபட்டனர். இதில், முதல் தவணை மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்வோர், ஆர்வமாக வந்து தடுப்பூசி செலுத்தி சென்றனர். நேற்று நடைபெற்ற தடுப்பூசி முகாமில் 26 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!