அந்தியூர் அருகே வீட்டின் முன்பு நிறுத்தி இருந்த இருசக்கர வாகனத்திற்கு தீ வைப்பு

அந்தியூர் அருகே வீட்டின் முன்பு நிறுத்தி இருந்த இருசக்கர வாகனத்திற்கு தீ வைப்பு
X

தீயினால் கருகி சேதமடைந்தன இருசக்கர வாகனம்.

அந்தியூர் அருகே இரவு வீட்டின் முன்பு நிறுத்தி இருந்த இருசக்கர வாகனத்திற்கு தீ வைத்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள புதுப்பாளையம் வ.உ.சி. நகர் பகுதியை சேர்ந்தவர் சார்லஸ் (வயது 45). இவரது வீட்டின் அருகே நேற்றிரவு தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தி இருந்தார். இந்நிலையில் அவர் வீட்டின் அருகே நிறுத்தி இருந்த மோட்டார் சைக்கிளுக்கு அடையாளம் தெரியாத சிலர் தீ வைத்தனர். இதில் அந்த மோட்டார் சைக்கிள் தீயில் எரிந்து சேதமானது. இதை கண்டு அவர் அதிர்ச்சிஅடைந்தார்.

இது குறித்து அந்தியூர் போலீஸ் நிலையத்தில் சார்லஸ் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று தீ வைத்து எரிக்கப்பட்ட மோட்டார் சைக்கிளை பார்வையிட்டனர். மேலும் மோட்டார் சைக்கிளுக்கு தீ வைத்தது யார்? அந்த பகுதியில் இரவு நேரங்களில் யாராவது வந்தார்களா? என விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!