மொடக்குறிச்சி அருகே செல்போன் திருடிய 2 பேர் கைது

மொடக்குறிச்சி அருகே செல்போன் திருடிய 2 பேர் கைது
X

பைல் படம்.

மொடக்குறிச்சி அருகே செல்போன் திருடிய சிறுவன் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

தர்மபுரி மாவட்டம் பிடமனேரி பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சரத்குமார். கட்டிட தொழிலாளி. ஈரோட்டில் உள்ள தனியார் கட்டுமான நிறுவனத்தில் தங்கி வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று இரவு சரத்குமார் வேலையை முடித்துக் கொண்டு தனது செல்போனை சார்ஜ் போட்டு தூங்க சென்றார். அவருடன் வேலை பார்க்கும் சிவகுமார் என்பவரும் தனது செல்போனை சார்ஜ் போட்டு தூங்க சென்றார்.

இந்நிலையில் அதிகாலை 3 மணி அளவில் ஏதோ சத்தம் கேட்டதை அடுத்து சரத்குமார் எழுந்து பார்த்தார். இப்போது சார்ஜ் போட்டு இருந்த 2 செல்போன்களை இரண்டு பேர் திருடி கொண்டு ஓடியதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதனையடுத்து 2 பேருக்கு தப்பி ஓடி விட்டனர்.

சரத்குமார் வேலை செய்யும் இடத்தின் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது இரண்டு பேர் அங்கு நின்று பேசிக்கொண்டிருந்தனர். அவர்களது நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த சரத்குமார் நண்பர்களுடன் சேர்ந்து இரண்டு பேரையும் பிடித்து விசாரித்தார். அப்போது அவர்கள் தான் செல்போன்களை திருடியது தெரியவந்தது. தொடர்ந்து அவர்களை மொடக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் சரத்குமார் மற்றும் நண்பர்கள் ஒப்படைத்தனர்.

போலீசார் விசாரணையில் அவர்கள் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியை சேர்ந்த பூபதி (25), மற்றொருவர் அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் என தெரியவந்தது. அவர்களிடம் இருந்து திருடப்பட்ட செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து மொடக்குறிச்சி போலீசார் 2 பேர் மீதும் வழக்குபதிவு செய்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!