ஜம்பை தனியார் கல்லூரியில் காசநோய் ஒழிப்பு, புகையிலை எதிர்ப்பு விழிப்புணர்வு முகாம்

ஜம்பை தனியார் கல்லூரியில் காசநோய் ஒழிப்பு, புகையிலை எதிர்ப்பு விழிப்புணர்வு முகாம்
X

கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்று காசநோய் ஒழிப்பு, புகையிலை எதிர்ப்பு விழிப்புணர்வு பேரணி.

ஈரோடு மாவட்டம் ஜம்பை அருகே சின்னியம்பாளையத்தில் உள்ள தனியார் கல்லூரியில் காசநோய் ஒழிப்பு மற்றும் புகையிலை எதிர்ப்பு விழிப்புணர்வு முகாம் நேற்று (26ம் தேதி) நடந்தது.

ஜம்பை அருகே சின்னியம்பாளையத்தில் உள்ள தனியார் கல்லூரியில் காசநோய் ஒழிப்பு மற்றும் புகையிலை எதிர்ப்பு விழிப்புணர்வு முகாம் நேற்று (26ம் தேதி) நடந்தது.

ஈரோடு மாவட்டம் ஜம்பை வட்டாரம் சின்னியம்பாளையம் பகுதியில் உள்ள எஸ்எஸ்எம் பார்மசி, பிசியோதெரபி கல்லூரியில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு காசநோய் ஒழிப்பு மற்றும் புகையிலை எதிர்ப்பு விழிப்புணர்வு முகாம் மற்றும் மாணவ, மாணவர்களை கொண்டு விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது.


ஈரோடு மாவட்ட துணை இயக்குனர் காசநோய் மருத்துவப் பணிகள் மற்றும் மாவட்ட சுகாதார அலுவலரின் அறிவுறுத்தலின் படி நடைபெற்ற இந்த முகாமில் புகையிலை பயன்பாடுகளினால் ஏற்படும் தீமைகள், புற்றுநோய் பாதிப்புகள், புகையிலை மற்றும் போதைப் பழக்கத்தால் இளைய சமுதாயத்தினரின் சீரழிவுகள், புகையிலை தடுப்புச் சட்டங்கள், புகையிலை பழக்க மீட்பு ஆலோசனை, காசநோய் பரவும் விதம், காச நோயின் வகைகள், நுரையீரல் காச நோயின் அறிகுறிகள், காச நோய்க்கான இலவச பரிசோதனை மற்றும் சிகிச்சை கிடைக்கும் இடங்கள், காச நோய்க்கான பரிசோதனை மேற்கொள்ள வேண்டியவர்கள், அரசு அறிவித்துள்ள 2009க்கு முன் பிறந்தவர்களுக்கான பிறப்பு சான்றிதழில் பெயர் பதிவு செய்யும் வாய்ப்பு குறித்தும் விளக்கமாக சுகாதார நலக் கல்வி வழங்கப்பட்டது.


இந்த முகாமில், ஈரோடு மாவட்ட துணை இயக்குனர் காச நோய் மருத்துவப் பணிகள் அலுவலக மாவட்ட நலக்கல்வியாளர் சிவகுமார், மாவட்ட சுகாதார அலுவலரின் நேர்முக உதவியாளர் மகேந்திரன், மாவட்ட புகையிலை தடுப்பு மைய சமூக சேவகர் சங்கீதா, கல்லூரி முதல்வர் முனைவர் சங்கமேஸ்வரன், நாட்டு நலப் பணித்திட்ட அலுவலர் கமலக்கண்ணன், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ராமசாமி, காசநோய் முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் செல்வம், சுகாதார ஆய்வாளர்கள் ராமகிருஷ்ணன், ரவி கல்லூரி விரிவுரையாளர்கள் மற்றும் மாணவ, மாணவியர்கள் 300 பேர்கள் கலந்து கொண்டனர்.


முடிவில், கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு காசநோய் ஒழிப்பு, புகையிலை எதிர்ப்பு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டு அனைவராலும் புகையிலை எதிர்ப்பு உறுதிமொழி எடுத்துக்கொள்ளப்பட்டது.

Tags

Next Story
Weight Loss Tips In Tamil