கொங்கு பொறியியல் கல்லூரியில் காசநோய், புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வு முகாம்

கொங்கு பொறியியல் கல்லூரியில் காசநோய், புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வு முகாம்
X

கொங்கு கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற விழிப்புணர்வு முகாமில் புகையிலை ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது.

பெருந்துறை அருகே உள்ள கொங்கு பொறியியல் கல்லூரியில் காசநோய், புகையிலை ஒழிப்பு மற்றும் டெங்கு தடுப்பு விழிப்புணர்வு முகாம் நடந்தது.

பெருந்துறை அருகே உள்ள கொங்கு பொறியியல் கல்லூரியில் காசநோய், புகையிலை ஒழிப்பு மற்றும் டெங்கு தடுப்பு விழிப்புணர்வு முகாம் இன்று (நவ.5) நடந்தது.

ஈரோடு மாவட்டம் சென்னிமலை வட்டாரம் வெள்ளோடு அரசு ஆரம்ப சுகாதார நிலைய பகுதிக்கு உட்பட்ட கொங்கு பொறியியல் கல்லூரியில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு காசநோய் ஒழிப்பு, புகையிலை எதிர்ப்பு மற்றும் டெங்கு, மழைக்கால நோய்கள் தடுப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.


ஈரோடு மாவட்ட துணை இயக்குநர் காசநோய் மருத்துவப் பணிகள் மற்றும் மாவட்ட சுகாதார அலுவலரின் அறிவுறுத்தலின் படி, நடைபெற்ற இந்த முகாமில் காசநோய் பரவும் விதம், நுரையீரல் காச நோயின் அறிகுறிகள் அதன் பாதிப்புகள், காச நோய்க்கான இலவச பரிசோதனை மற்றும் சிகிச்சை கிடைக்கும் இடங்கள், காச நோய்க்கான பரிசோதனை மேற்கொள்ளப்பட வேண்டியவர்கள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.

தொடர்ந்து, ஆரம்ப நிலை காசநோய் அறிகுறிகள் கண்டறிவதின் முக்கியத்துவம், புகையிலை பயன்பாடுகளினால் ஏற்படும் தீங்குகள், புற்றுநோய் பாதிப்புகள், இளைய சமுதாயத்தின் சீர்கேடுகள், புகையிலை தடுப்புச் சட்டங்கள், புகையிலைப் பழக்க மீட்பு ஆலோசனை, டெங்கு காய்ச்சல் பரவும் விதம், கொசு உற்பத்தி தடுப்பு வழிமுறைகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.


மேலும், காய்ச்சலுக்கு சுய மருத்துவம் தவிர்த்து மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டியதின் அவசியம், கொசு உற்பத்தி தடுப்பில் மாணவர்களின் பங்கு, மழைக்கால நோய்கள் அதன் பாதுகாப்பு வழிமுறைகள், பாதுகாப்பான குடிநீரின் அவசியம், பாதுகாப்பற்ற குடிநீரால் ஏற்படும் நோய்கள் குறித்து விளக்கமாக சுகாதார நலக்கல்வி வழங்கப்பட்டது.

இம்முகாமில், ஈரோடு மாவட்ட துணை இயக்குநர் காசநோய் மருத்துவப் பணிகள் அலுவலக மாவட்ட நலக்கல்வியாளர் சிவகுமார், மாவட்ட சுகாதார அலுவலக மாவட்ட புகையிலை தடுப்பு பிரிவு சமூக சேவகர் சங்கீதா, காசநோய் முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் லோகநாயகி, கல்லூரி முதல்வர் பாலுசாமி, கல்லூரி விரிவுரையாளர்கள் பழனிசாமி, கண்ணன், கிருஷ்ணராஜா, சுகாதார ஆய்வாளர்கள் மகேஸ்வரன், ராகுல் மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்கள் 350 பேர்கள் கலந்து கொண்டனர்.

மேலும், முகாமின் முடிவில் புகையிலை எதிர்ப்பு மற்றும் டெங்கு தடுப்பு உறுதிமொழி அனைவராலும் எடுத்துக் கொள்ளப்பட்டது.

Tags

Next Story
2 வயசு வரைக்கும் உங்க குழந்தைங்களுக்கு இந்த உணவுகளை மட்டும் குடுக்காதீங்க!!