பவானி ஒரிச்சேரிப்புதூரில் காசநோய், தொழுநோய் ஒழிப்பு விழிப்புணர்வு முகாம்

பவானி ஒரிச்சேரிப்புதூரில் காசநோய், தொழுநோய் ஒழிப்பு விழிப்புணர்வு முகாம்
X

ஒரிச்சேரிப்புதூரில் சுகாதார விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

பவானி அருகே உள்ள ஒரிச்சேரிப்புதூரில் காசநோய், தொழுநோய் ஒழிப்பு மற்றும் இளம் வயது திருமண எதிர்ப்பு விழிப்புணர்வு முகாம் இன்று நடைபெற்றது.

பவானி அருகே உள்ள ஒரிச்சேரிப்புதூரில் காசநோய், தொழுநோய் ஒழிப்பு மற்றும் இளம் வயது திருமண எதிர்ப்பு விழிப்புணர்வு முகாம் இன்று (20ம் தேதி) நடைபெற்றது.

ஈரோடு மாவட்டம் ஜம்பை வட்டாரம் ஆப்பக்கூடல் அரசு ஆரம்ப சுகாதார நிலைய பகுதிக்கு உட்பட்ட ஒரிச்சேரிப்புதூரில் நடைபெற்ற வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாமில் பொதுமக்களுக்கு காசநோய், தொழுநோய் ஒழிப்பு, டெங்கு தடுப்பு மற்றும் இளம் வயது திருமண எதிர்ப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

இந்த முகாமிற்கு ஈரோடு மாவட்ட துணை இயக்குனர் காச நோய் அலுவலக மாவட்ட நலக்கல்வியாளர் சிவகுமார் தலைமை தாங்கினார். மாவட்ட சுகாதார அலுவலரின் நேர்முக உதவியாளர் மகேந்திரன், துணை இயக்குனர் தொழுநோய் அலுவலக மாவட்ட நலக்கல்வியாளர் பழனிசாமி, வட்டார மருத்துவ அலுவலர் மாணிக்கவேல் ராஜன், மருத்துவ அலுவலர் ரம்யா, ஒரிச்சேரிப்புதூர் ஊராட்சி மன்ற உப தலைவர் சித்ரா, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ராமசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


இதில், காசநோய் பரவும் விதம் அதன் அறிகுறிகள், நுரையீரல் காச நோயின் பாதிப்புகள், காச நோய்க்கான இலவச பரிசோதனை மற்றும் சிகிச்சை கிடைக்கும் இடங்கள், காசநோய் பாதிக்கக்கூடிய அபாய கட்டத்தில் உள்ளவர்கள், தொழுநோய் ஆரம்ப அறிகுறிகள், தொழு நோயினால் ஏற்படும் அங்கஹூனங்கள், தொழு நோய்க்கான சிகிச்சைக்காலம் மற்றும் இலவசமாக கிடைக்கும் இடங்கள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.

தொடர்ந்து, டெங்கு காய்ச்சல் பரவும் விதம், கொசு உற்பத்தி தடுப்பு வழிமுறைகள், இளம் வயது திருமணத்தால் ஏற்படும் பெண் கல்வி பாதிப்புகள் அதனால் ஏற்படும் சமூக பின்னடைவுகள், இளம் வயது கர்ப்பத்தால் ஏற்படும் பிரசவகால தாய் சேய் மரணங்கள் குறைமாத பிரசவங்கள், கர்ப்பச்சிதைவுகள், ஊட்டச்சத்து இல்லா குழந்தை பிறத்தல், இரத்த சோகை நோய் குறித்து விளக்கமாக சுகாதார நலக்கல்வி வழங்கப்பட்டது.


இதனையடுத்து, காசநோய் தொழுநோய், டெங்கு, எய்ட்ஸ், குடும்ப நலம், மக்களைத் தேடி மருத்துவம் திட்டம், ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மைய ஊட்டச்சத்து உணவு முறைகள் குறித்து விழிப்புணர்வு கண்காட்சி அரங்குகள் மக்களின் பார்வைக்கு அமைக்கப்பட்டு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது.

இந்த முகாமில் வட்டார மருத்துவமல்லா மேற்பார்வையாளர் சீனிவாசன், காசநோய் முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் செல்வம், சுகாதார ஆய்வாளர்கள் பாலமுருகன், சங்கர், ஜெகதீஷ் குமார், ஜெய ஹரி, குகன், ஜீவானந்தம், தினகர், ரவிக்குமார், பொது சுகாதார துறை அலுவலர்கள், ஆப்பக்கூடல் தனியார் நர்சிங் கல்லூரி மாணவ, மாணவியர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

மேலும், சிறப்பு மருத்துவ முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு உயர் ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய்க்கான பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

Tags

Next Story
வாழ்க்கையே வெறுத்துப்போய் நிற்கிறதா? ஒரு நிமிடம் இதை படிங்க..!