அதிமுக பிரிவுக்கு ஈபிஎஸ் தான் காரணம்; டிடிவி தினகரன்

அதிமுக பிரிவுக்கு ஈபிஎஸ் தான் காரணம்; டிடிவி தினகரன்
X
அமமுக தேர்தல் பணிமனையை திறந்து வைத்த பின், பேசிய முன்னாள் அமைச்சர் சண்முகவேலு.
அதிமுக பிரிவுக்கு ஈபிஎஸ் தான் காரணம் என்று அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

ஈரோட்டில் அமமுக சார்பில், அமைக்கப்பட்டுள்ள தேர்தல் பணிமனையை திறந்து வைத்த அக்கட்சியின் தேர்தல் ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் அமைச்சருமான சண்முகவேலு பேசியதாவது, எங்களுக்கு தேர்தல் களம் புதிதல்ல. லோக்சபா தேர்தல், சட்டசபை தேர்தல், உள்ளாட்சித் தேர்தல் என பல தேர்தல் களை சந்தித்துள்ளோம். ஈரோடு கிழக்குத் தொகுதி தேர்தலில் மக்களை சந்தித்து ஆளும் அரசு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாததை எடுத்துரைப்போம். மின்கட்டண உயர்வு, பால் விலை உயர்வு போன்ற மக்கள் பிரச்னையை முன்வைத்து களம் காணுவோம். அமமுக வேட்பாளரை ஆதரித்து டிடிவி தினகரன் 12ம் தேதி முதல் 25ம் தேதி வரை ஈரோட்டில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட உள்ளார். இடைத்தேர்தலில் பணம் பட்டு வாடா குறித்து புகார் எழுந்துள்ளது. இது கண்டனத்திற்குரியது. பணம் பட்டுவாடா குறித்து நாங்களும் தேர்தல் ஆணையத்தில் புகார் அளிப்போம், என்றார்.

இதற்கிடையே, சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன், எடப்பாடி பழனிசாமி மீது மிகவும் கோபமடைந்திருந்த மக்கள் ஆட்சிப் பொறுப்பை திமுக விடம் கொடுத்து விட்டனர். தேர்தல் வாக்குறுதிகளில் திமுக என்ன சொன்னார்களோ அதில் ஒன்று கூட நிறைவேற்றவில்லை. மாணவர்கள், அரசு ஊழியர்கள், விவசாயிகள் என அனைத்து தரப்பு மக்களுக்கும் திமுக, ஆட்சியால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிமுகவின் உண்மையான தொண்டர்களாக தங்களை நினைப்பவர்கள் ஓரணியில் இணைந்து பொது வேட்பாளரை நிறுத்தினால் தான் அவர்களை வீழ்த்த முடியும். திமுகவின் பணபலம், ஆட்சி அதிகாரம் ஆகியவற்றை எதிர்க்க அக்கட்சியை எதிர்க்ககூடியவர்கள் அனைரும் ஓரணியில் நிற்க வேண்டும். ஓ.பன்னீர்செல்வம் தன் தவறை உணர்ந்து விட்டார். எடப்பாடி பழனிசாமி தான் அதிமுக பிரிந்து கிடப்பதற்கு காரணம், என்றார்.

Tags

Next Story
பெருந்துறையில் புகையிலை விற்பனைக்கு எதிராக கடைகளுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்