சத்தியமங்கலம் அருகே லாரி தலைக்குப்புற கவிழ்ந்து விபத்து: 6 பேர் காயம்

சத்தியமங்கலம் அருகே லாரி தலைக்குப்புற கவிழ்ந்து விபத்து: 6 பேர் காயம்
X

Erode news- தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளான லாரி.

Erode news- ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த கடம்பூர் அருகே கரும்பு பாரம் ஏற்றி வந்த லாரி தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 6 பேர் காயமடைந்தனர்.

Erode news, Erode news today- கடம்பூர் அருகே கரும்பு பாரம் ஏற்றி வந்த லாரி தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 6 பேர் காயமடைந்தனர்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த கடம்பூரை அருகே கோட்டமாளத்தில் இருந்து சத்தியமங்கலத்தில் உள்ள தனியார் சர்க்கரை ஆலைக்கு கரும்பு பாரம் ஏற்றிய லாரி நேற்று புறப்பட்டது. லாரியை அந்தியூர் பகுதியை சேர்ந்த மணிகண்டன் (வயது 45) என்பவர் ஓட்டினார். அந்த லாரியில் கடம்பூர் அருகே உள்ள அணைக்கரை கிணத்துதொட்டி பகுதியை சேர்ந்த ராஜாமணி (35) உள்பட 5 பெண்கள் வந்தனர்.

கோட்டமாளத்தில் இருந்து சிறிது தூரம் சென்றபோது லாரி திடீரென நிலைதடுமாறி சாலையோர பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ராஜாமணி படுகாயம் அடைந்தார். டிரைவர் உள்பட 5 பேர் லேசான காயம் அடைந்தனர்.

உடனே அக்கம் பக்கத்தினர் விரைந்து சென்று படுகாயம் அடைந்த ராஜாமணியை மீட்டு சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர். மற்ற 5 பேரும் கடம்பூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் புறநோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்ற பின்னர் வீடு திரும்பினர். இதுகுறித்து கடம்பூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story
ai solutions for small business