ஈரோடு மாவட்டத்தில் 14 வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பணியிட மாற்றம்
வட்டார வளர்ச்சி அலுவலகங்கள் பணியிட மாற்றம் (பைல் படம்).
ஈரோடு மாவட்டத்தில் 14 வட்டார வளர்ச்சி அலுவலர்கள் (பிடிஓ) நிர்வாக வசதிக்காக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
ஈரோடு மாவட்ட அளவில் 14 வட்டார வளர்ச்சி அலுவலர்கள் (பிடிஓக்கள்) நேற்று பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். அதன்படி, சென்னிமலை வட்டார வளர்ச்சி அலுவலராக (கிராம ஊராட்சி) பணியாற்றி வந்த பாஸ்கர்பாபு சென்னிமலை வட்டார ஊராட்சி அலுவலராகவும், சென்னிமலை வட்டார வளர்ச்சி அலுவலராக (வளர்ச்சி ஊராட்சி) பணியாற்றி வந்த கல்பனா கொடுமுடிக்கும், கொடுமுடி வட்டார வளர்ச்சி அலுவலராக (கிராம ஊராட்சி) பணியாற்றி வந்த குகநாதன் தாளவாடி வளர்ச்சி ஊராட்சி அலுவலராகவும் மாற்றப்பட்டுள்ளனர்.
அதேபோல, தாளவாடி வட்டார வளர்ச்சி அலுவலராக (வளர்ச்சி ஊராட்சி) பணியாற்றி கே.மனோகரன் ஈரோடு கிராம ஊராட்சி அலுவலராகவும், ஈரோடு வட்டார வளர்ச்சி அலுவலராக (கிராம ஊராட்சி) பணியாற்றி வந்த சரஸ்வதி நம்பியூருக்கும், தாளவாடி வட்டார வளர்ச்சி அலுவலராக (கிராம ஊராட்சி) பணியாற்றிய பாலமுருகன் சென்னிமலைக்கும், பவானி வட்டார வளர்ச்சி அலுவலராக (வளர்ச்சி ஊராட்சி) அலுவலராக பணியாற்றிய அர்த்தனாரீஸ்வரன் தாளவாடி கிராம ஊராட்சி அலுவலராகவும் மாற்றப்பட்டுள்ளனர்.
இதேபோல, சத்தியமங்கலம் வட்டார வளர்ச்சி அலுவலராக (கிராம ஊராட்சி) பணியாற்றி வந்த சரவணன் அந்தியூர் வளர்ச்சி ஊராட்சி அலுவலராகவும், அந்தியூர் வட்டார வளர்ச்சி அலுவலராக (வளர்ச்சி ஊராட்சி) பணியாற்றி வந்த பிரேம்குமார் கோபி கிராம் ஊராட்சி அலுவலராகவும், கோபி வட்டார வளர்ச்சி அலுவலராக (கிராம ஊராட்சி) பணியாற்றி வந்த திருநாவுக்கரசு மொடக்குறிச்சிக்கும், மொடக்குறிச்சி வட்டார வளர்ச்சி அலுவலராக (கிராம ஊராட்சி) பணியாற்றி வந்த சண்முகபிரியா மொடக்குறிச்சி (வளர்ச்சி ஊராட்சி) அலுவலராகவும் மாற்றப்பட்டுள்ளனர்.
மேலும், மொடக்குறிச்சி வட்டார வளர்ச்சி அலுவலராக (வளர்ச்சி ஊராட்சி) பணியாற்றி வந்த பிரேமலதா பெருந்துறைக்கும், பெருந்துறை வட்டார வளர்ச்சி அலுவலராக (வளர்ச்சி ஊராட்சி) பணியாற்றி வந்த அப்துல் வஹாப் சத்தி கிராம ஊராட்சி அலுவலராகவும், ஈரோடு டிஆர்டிஓயில் வட்டார வளர்ச்சி அலுவலராக (ஹவுசிங்) பணியாற்றி வந்த லதா ஈரோடு கண்காணிப்பாளர் (ஆடிட்) ஆகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu