ஈரோட்டில் சுவை மற்றும் மணமூட்டும் பொருட்களின் ஏற்றுமதி குறித்த பயிற்சி
ஈரோட்டில் சுவை, தாளித மற்றும் மணமூட்டும் பொருட்களின் ஏற்றுமதி குறித்த பயிற்சி நிகழ்ச்சி அமைச்சர் முத்துசாமி தலைமையில் நடைபெற்றது.
ஈரோட்டில் சுவை, தாளித மற்றும் மணமூட்டும் பொருட்களின் ஏற்றுமதி குறித்த பயிற்சி மற்றும் உற்பத்தியாளர்-வணிகர் இணைப்பு கூட்டம் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சு.முத்துசாமி தலைமையில் நடைபெற்றது.
ஈரோடு திண்டல் ஹோட்டல் டர்மரிக்கில், வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறையின் சார்பில் ஈரோடு, திருப்பூர், கோவை, நீலகிரி, கரூர். நாமக்கல், சேலம் மற்றும் தர்மபுரி மாவட்டங்களுக்கான சுவை. தாளித மற்றும் மணமூட்டும் பொருட்களின் ஏற்றுமதி குறித்த பயிற்சி உற்பத்தியாளர்- வணிகர் இணைப்பு கூட்டம் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சு.முத்துசாமி தலைமையில் நடைபெற்றது.
தமிழ்நாடு அரசின் இருமடங்கு விளைச்சல் மும்மடங்கு வருமானம் என்ற கொள்கைக்கு இணங்க வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்
துறையின் மூலம் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்துறையின் மூலமாக உழவர்கள் ஒருங்கிணைக்கப்பட்டு உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் நிறுவப்பட்டு விவசாயிகள் தங்களின் விளைபொருட்களை நியாயமான விலைக்கு விற்பனை மேற்கொள்ளவும், விளைபொருட்களை மதிப்பு கூட்டி விற்பனை செய்வதன் மூலம் அதிக லாபம் பெறவும் விவசாயிகளை வர்த்தகர்களாக மாற்றவும் வழிவகை செய்து வருகிறது.
இதன் தொடர்ச்சியாக. இன்று (13ம் தேதி) விவசாயிகளை ஏற்றுமதியாளர் ஆக்கும் நோக்கத்தோடு வேளாண்மை உழவர் நலத்துறையின் சார்பில் சுவை, தாளித மற்றும் மணமூட்டும் பொருட்களுக்கான ஏற்றுமதி குறித்த பயிற்சி மற்றும் உற்பத்தியாளர் வணிகர் இணைப்பு நமது ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு, திருப்பூர், கோவை, நீலகிரி, கரூர், நாமக்கல், சேலம் மற்றும் தர்மபுரி மாவட்டங்களை சார்ந்த விவசாயிகளுக்கு நடத்தப்படுகிறது.
இந்நிகழ்ச்சியில், தரம்மிகு நறுமணப் பொருட்களின் ஏற்றுமதியில் நறுமணப்பயிர்கள் வாரியத்தின் பங்கு. ஏற்றுமதி குறித்த ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள், சுவை, தாளித மற்றும் மணமூட்டும் பொருட்களின் ஏற்றுமதியில் அனுமதிக்கப்பட்ட சிப்பம் கட்டும் பொருட்கள், தொழில் முனைவோர்க்கான வாய்ப்பு, வேளாண் வணிக தொழில் முனைவோர்க்கான வாய்ப்பு, ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை, ஏற்றுமதியில் இந்திய கடன் உத்தரவாத ஏற்றுமதி நிறுவனத்தின் பங்கு, மஞ்சள் வர்த்தகத்தில் ஈரோடு விற்பனைக் குழுவின் பங்கு. ஏற்றுமதியில் வாய்ப்புகள் மற்றும் உகந்த நாடுகள், பயன்பாடு மருத்துவ நிறுவனங்களில் உள்ளிட்ட தலைப்புகளில் தொழில்நுட்ப வல்லுநர்கள் கலந்தாலோசனை வழங்கினார்கள்.
இக்கூட்டத்தின் மூலமாக விவசாயிகள் மற்றும் உள்ளூர் வியாபாரிகள் தங்களின் மஞ்சள், குறுமிளகு, ஜாதிக்காய், மிளகாய் வற்றல், கொத்தமல்லி போன்ற நறுமணப் பொருட்களின் ஏற்றுமதி தொடர்பான பயிற்சி பெற உள்ளார்கள். மேலும், ஏற்றுமதியாளர்கள் மற்றும் வியாபாரிகளுக்கு இடையே விவசாய விளைபொருட்கள் விநியோகம் குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வர்த்தக ரீதியான ஒருங்கிணைப்பு ஏற்படுத்திட வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் உலகளவில் இந்தியா நறுமணப் பயிர்களின் உற்பத்தி. நுகர்வு மற்றும் ஏற்றுமதி ஆகியவற்றில் முதலிடம் வகிக்கிறது.
மதிப்புக் கூட்டிய நறுமணப் பொருட்கள் சீனா, அமெரிக்கா, பங்களாதேஷ், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், தாய்லாந்து, மலேசியா, இந்தோனேசியா, இங்கிலாந்து மற்றும் இலங்கை உள்ளிட்ட 180 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டிருக்கிறது. இவற்றுள் மிளகாய் வற்றல், சீரகம், நறுமண எண்ணெய் மற்றும் ரெசின்கள், மதிப்புக்கூட்டிய எண்ணெய் புதினா வகைகள், மஞ்சள், மசாலா பொருட்கள், ஏலக்காய் மற்றும் குறு மிளகு ஆகியன முக்கிய பங்கு வகிக்கின்றன.
தமிழகத்தில் உற்பத்தி செய்யும் நறுமணப் பயிர்களில், குறு மிளகு, ஏலக்காய், ஜாதிக்காய் மற்றும் ஜாதி பத்திரி ஆகியன அடங்கும். ஈரோடு மாவட்டம் மஞ்சள் புவிசார் குறியீடு பெற்றுள்ளது. உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் மற்றும் கூட்டுறவு சங்கங்கள் மூலமாக மட்டும் ஆண்டுக்கு சுமார் 66.94 ஆயிரம் மெ.டன் அளவு ரூ.57.74 ஆயிரம் லட்சம் மதிப்பிலான மஞ்சள் வர்த்தகம் நடைபெற்று வருகிறது.
தற்போது நடைபெற்று வரும் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை மூலம் நடைபெறும் ஈரோடு, திருப்பூர், கோவை, நீலகிரி, கரூர், நாமக்கல், சேலம் மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் உள்ள மஞ்சள், மிளகு, ஜாதிக்காய், கொத்தமல்லி, வரமிளகாய் மற்றும் மலைப் பூண்டு போன்ற நறுமணப் பொருட்கள் பயிரிடும் விவசாயிகள் கலந்து கொண்டு ஏற்றுமதி குறித்த பயிற்சி வழங்கப்படுகிறது.
மேலும், உற்பத்தியாளர்கள் வணிகர்கள் இணைப்பு கூட்டம் மூலமாக மேற்கண்ட மாவட்டங்களின் விவசாயிகள் உற்பத்தி செய்த 2,775 குவிண்டால் அளவு மஞ்சள், 9900 கிலோ அளவு மிளகு. 1,500 கிலோ ஜாதிக்காய், 7 மெ.டன் அளவு கொத்தமல்லி, 4 மெ.டன் கறிவேப்பிலை. 400 மெ.டன் புளி போன்றவை இன்று 23 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் ஏற்றுமதியாளர்கள் உள்ளுர் வியாபாரிகள் உடன் வர்த்தக ரீதியான ஒருங்கிணைப்பு ஏற்பட உள்ளது.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா, ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கே.இ.பிரகாஷ், ஈரோடு மாநகராட்சி மேயர் சு.நாகரத்தினம், துணை மேயர் வே.செல்வராஜ், இணை இயக்குநர் (வேளாண்மை) எஸ்.வெங்கடேசன், துணை இயக்குநர் (ஈரோடு விற்பனை குழு) இரா.சாவித்திரி, துணை இயக்குநர் (வேளாண் வணிகம்) வி.சி.மகாதேவன். உதவி இயக்குநர் (நறுமணப் பயிர்கள் வாரியம்) க.கனகதிலீபன் உட்பட ஈரோடு, திருப்பூர். கோவை, நீலகிரி, கரூர், நாமக்கல், சேலம் மற்றும் தர்மபுரி மாவட்ட உற்பத்தியாளர்கள், வணிகர்கள், தொடர்புடைய துறை அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் விவசாயிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu