ஈரோடு: பர்கூர் மலைப்பாதையில் திரும்ப முடியாமல் நின்ற டேங்கர் லாரி

ஈரோடு: பர்கூர் மலைப்பாதையில் திரும்ப முடியாமல் நின்ற டேங்கர் லாரி
X

யு வளைவில் திரும்ப முடியாமல் நின்ற டேங்கர் லாரி.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த பர்கூர் மலைப்பாதையில் திரும்ப முடியாமல் நின்ற டேங்கர் லாரியால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Erode News, Erode Today News, Erode Live Today - அந்தியூர் அடுத்த பர்கூர் மலைப்பாதையில் திரும்ப முடியாமல் நின்ற டேங்கர் லாரியால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள பர்கூர் மற்றும் தாமரைக்கரை மலைப்பகுதி வழியாக கர்நாடகா மாநிலம் மைசூருக்கு தினமும் கார், வேன், இருசக்கர வாகனங்கள் என தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன.

குறிப்பாக தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து சரக்கு வாகனங்கள் அதிகளவில் இந்த வழியாக மைசூருக்கு சென்று வருகிறது. மேலும், கனரா வாகனங்கள் அடிக்கடி பழுதாகி சாலையில் நிற்பதால் போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டு வருகிறது.

இந்நிலையில், இன்று (வெள்ளிக்கிழமை) காலை பர்கூர் தாமரைக்கரை யு வளைவில் டேங்கர் லாரி திரும்ப முடியாமல் லாரி அப்படியே நின்றது. இதனால் மலைப்பாதையின் இருபுறமும் வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து, ஜேசிபி இயந்திரத்தின் மூலம் டேங்கர் லாரி வளைவில் இருந்து திருப்பப்பட்டது. அதன்பிறகே, வாகனங்கள் செல்லத் தொடங்கின.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!