பவானிசாகர் அணையின் இன்றைய நீர்மட்டம் நிலவரம்

பவானிசாகர் அணையின் இன்றைய நீர்மட்டம் நிலவரம்
X

பவானிசாகர் அணை (பைல் படம்).

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 8 மணி நிலவரப்படி 102.02 அடியாக உள்ளது.

ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக அணைக்கு வரும் நீர்வரத்தை காட்டிலும் பாசனத்திற்கு தொடர்ந்து அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருவதால் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருகிறது. மேலும் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் மழைப்பொழிவு இல்லாததால் பவானிசாகர் அணைக்கு வரும் நீர்வரத்தும் வெகுவாக குறைந்து விட்டது.

பவானிசாகர் அணையின் இன்றைய (14.01.2023) நீர்மட்டம் நிலவரம் காலை 8 மணி நிலவரப்படி:-

நீர் மட்டம் - 102.02 அடி ,

நீர் இருப்பு - 30.33 டிஎம்சி ,

நீர் வரத்து வினாடிக்கு - 477 கன அடி ,

நீர் வெளியேற்றம் - 2,750 கன‌ அடி ,

கீழ்பவானி வாய்க்காலில் பாசனத்திற்காக 1,500 கன அடி நீரும், பவானி ஆற்றில் 1,250 கன‌ அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. மேலும் பவானிசாகர் அணை பகுதியில் மழைப்பொழிவு இல்லை.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!