/* */

பவானிசாகர் அணையின் இன்றைய (நவ.14) நீர்மட்ட நிலவரம்

பவானிசாகர் அணையின் நீர்மட்டம் செவ்வாய்க்கிழமை (நவ.14) இன்று காலை 8 மணி நிலவரப்படி 74.97 அடியாக உள்ளது.

HIGHLIGHTS

பவானிசாகர் அணையின் இன்றைய (நவ.14) நீர்மட்ட நிலவரம்
X

பவானிசாகர் அணை.

ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணையின் நீர்மட்டம் செவ்வாய்க்கிழமை (நவ.14) இன்று காலை 8 மணி நிலவரப்படி 74.97 அடியாக உள்ளது.

தமிழகத்தில் மேட்டூர் அணைக்கு அடுத்தபடியாக இரண்டாவது பெரிய அணையாக விளங்கும் பவானிசாகர் அணை 105 அடி உயரமும், 32.8 டிஎம்சி கொள்ளளவும் கொண்டதாகும். அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் உள்ள 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

கடந்த சில மாதங்களாக அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்யாததால் அணைக்கு நீர்வரத்து குறைந்து அணையின் நீர்மட்டம் 64 அடிக்கும் கீழே சரிந்தது. இந்த நிலையில், பவானிசாகர் அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளான கோவை, நீலகிரி மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருவதால், பவானிசாகர் அணைக்கான நீர்வரத்து அதிகரித்து, நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.

செவ்வாய்க்கிழமை (நவ.14) இன்று காலை 8 மணி நிலவரப்படி அணையின் நீர்மட்ட நிலவரம்:-

நீர் மட்டம் - 74.97 அடி ,

நீர் இருப்பு - 13.16 டிஎம்சி ,

நீர் வரத்து வினாடிக்கு - 1,814 கன‌ அடி ,

நீர் வெளியேற்றம் - 1,500 கன அடி ,

கீழ்பவானி வாய்க்காலில் பாசனத்திற்காக வினாடிக்கு 1,500 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. மேலும், பவானிசாகர் அணை பகுதியில் மழைப்பொழிவு இல்லை.

Updated On: 14 Nov 2023 2:30 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    எவரெஸ்ட், MDH மசாலாப் பொருட்களை நேபாளத்தில் விற்பனை செய்ய தடை
  2. நாமக்கல்
    கொல்லிமலையில் ஜவகர் சிறுவர் மன்ற கோடைகால கலை பயிற்சி
  3. தேனி
    நீர் நிலை அருகில் செல்ல வேண்டாம்: தேனி கலெக்டர் எச்சரிக்கை
  4. தென்காசி
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  5. லைஃப்ஸ்டைல்
    வேலைத்தள உத்வேகத்தை உயர்த்தும் 7 உத்திகள்
  6. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  7. சினிமா
    கையில் கட்டுடன் வந்த ஐஸ்வர்யா ராய்க்கு கேன்ஸ்-ல் அன்பான வரவேற்பு
  8. பூந்தமல்லி
    விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதித்த பேரூராட்சி தலைவர்...
  9. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  10. கலசப்பாக்கம்
    டெங்கு மலேரியாவை தடுக்க நிலவேம்பு குடிநீர் வழங்கல்