திருச்சியில் ஜூலை 14ம் தேதி தமாகா மாநாடு: விடியல் சேகர் தகவல்

திருச்சியில் ஜூலை 14ம் தேதி தமாகா மாநாடு: விடியல் சேகர் தகவல்
X

Erode news- ஈரோட்டில் தமாகா கட்சியின் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் எடுக்கப்பட்ட படம்.

Erode news- தமாகா மாநில மாநாடு மற்றும் பொதுக்கூட்டம் திருச்சி உழவர் சந்தை திடலில் வரும் 14ம் தேதி நடைபெற உள்ளது என ஈரோட்டில் கட்சியின் பொதுச்செயலாளா் விடியல் சேகா் கூறினார்.

Erode news, Erode news today- தமாகா மாநில மாநாடு மற்றும் பொதுக்கூட்டம் திருச்சி உழவர் சந்தை திடலில் வரும் 14ம் தேதி நடைபெற உள்ளது என ஈரோட்டில் கட்சியின் பொதுச்செயலாளா் விடியல் சேகா் கூறினார்.

ஈரோட்டில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் இன்று (3ம் தேதி) நடைபெற்ற கட்சிக் கூட்டத்தில் கட்சியின் மாநில பொதுச் செயலாளரும், முன்னாள் எம்எல்ஏவுமான விடியல் சேகர் கலந்து கொண்டார். இதில், கட்சியின் நிர்வாகிகள் எஸ்.டி.சந்திரசேகர், எம்.யுவராஜா, ஆறுமுகம், விஜயகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், தமாகா கட்சியின் மாநில பொதுச் செயலாளரும், முன்னாள் எம்எல்ஏவுமான விடியல் சேகர் கூறியதாவது, காமராஜரின் 122வது பிறந்தநாள் விழாவையொட்டி, தமாகா சார்பில் ஜூலை 14ம் தேதி திருச்சி உழவர் சந்தை திடலில் மாநில அளவிலான மாநாடு நடைபெற உள்ளது.

கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் மாநாட்டிற்கு தலைமை தாங்குவார். தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்கள் அண்ணாமலை, ஓபிஎஸ், அன்புமணி ராமதாஸ், டிடிவி தினகரன், ஜான் பாண்டியன், ஏசி சண்முகம் பாரிவேந்தர், தேவநாதன் யாதவ் உள்ளிட்ட அனைத்து தலைவர்களும் கலந்து கொள்கின்றனர்.

கூட்டத்தில், 50,000க்கும் மேற்பட்ட தொண்டர்கள் கலந்து கொள்வார்கள். அதன்பிறகு, கட்சித் தலைவர், கட்சியை சீரமைத்து, புதிய உறுப்பினர்களைச் சேர்த்து, புதிய நிர்வாகிகளை நியமிப்பார். இவ்வாறு அவர் கூறினார்.

Tags

Next Story
ai tools for education