ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல்; 9 மணி வாக்குப்பதிவு நிலவரம், திமுக அதிமுக மோதல்
திமுக கூட்டணி கட்சி காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் தனது வாக்கினை செலுத்தினார்.
ELECTION BREAKING; ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று (திங்கட்கிழமை) காலை 7 மணி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. பொதுமக்கள், அரசியல் தலைவர்கள் உள்பட பல்வேறு தரப்பினரும் நீண்ட வரிசையில் நின்று தங்கள் வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர்.
இந்நிலையில், ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் காலை 9 மணி நிலவரப்படி பதிவான வாக்குப்பதிவு விவரம் வெளியிட்டுள்ளது. அதன்படி, ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் காலை 9 மணி நிலவரப்படி 10.10 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது.
இதன்படி, ஆண் வாக்காளர்கள் 12,679 பேர், பெண் வாக்காளர்கள் 10,294 பேர் என மொத்தம் 22,973 பேர் தங்களது வாக்கினை செலுத்தி ஜனநாயக கடமையை நிறைவேற்றி உள்ளனர்.
ஈரோடு கிழக்கு தொகுதியில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் திமுக - அதிமுகவினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஈரோடு பெரியார் நகர் பகுதியில் வாக்குச்சாவடிக்கு அருகே வாக்குச்சேகரிப்பில் ஈடுபட்டதால் திமுக - அதிமுகவினர் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து அங்கு விரைந்து சென்ற காவல்துறையினர் இரு தரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் செய்தனர். இந்த சம்பவத்தால் வாக்குச்சாவடி அருகே பரபரப்பு ஏற்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu