கோபி அருகே வீட்டில் 10.5 பவுன் நகை, ரூ.3,500 பணம் கொள்ளை போன வழக்கில் மூவர் கைது

கோபி அருகே வீட்டில் 10.5 பவுன் நகை, ரூ.3,500 பணம் கொள்ளை போன வழக்கில் மூவர் கைது
X

கைது செய்யப்பட்ட மூவரை படத்தில் காணலாம்.

ஈரோடு மாவட்டம் கோபி அருகே வீட்டில் 10.5 பவுன் நகை மற்றும் ரூ.3,500 ரொக்கம் பணம் கொள்ளை போன வழக்கில் மூவர் போலீசார் கைது செய்தனர்.

கோபி அருகே வீட்டில் 10.5 பவுன் நகை மற்றும் ரூ.3,500 ரொக்கம் பணம் கொள்ளை போன வழக்கில் மூவர் போலீசார் கைது செய்தனர்.

ஈரோடு மாவட்டம் கோபி அடுத்த டி.என்.பாளையம் அருகே உள்ள கே.என்.பாளையம் பெருமாள் கோவில் வீதியில் சேர்ந்தவர் நாகராஜ் (வயது 27). இவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணமானது. இந்த நிலையில், கடந்த மார்ச் மாதம் 2ம் தேதி அதிகாலை சுமார் 5 மணியளவில் தனது வீட்டில் இருந்த பீரோ திறந்து இருந்ததை நாகராஜின் தாய் பார்த்துள்ளார். இதனால் சந்தேகமடைந்த நாகராஜ் மற்றும் அவரது தாய் 2 பேரும் பீரோவில் வைத்திருந்த நகைகளை தேடிய போது காணவில்லை.

இதனையடுத்து, 14 பவுன் செயின், முக்கால் பவுன் மோதிரம், 3 பவுன் செயின், 3 பவுன் நெக்லஸ், 2 பவுன் செயின், கால் பவுன் ஜிமிக்கி கம்மல் மற்றும் ரொக்க பணம் 3,500 ரூபாய் கொள்ளை போனதாக நாகராஜ் பங்களாப்புதூர் போலீசில் புகார் அளித்து இருந்தார். புகாரின் பேரில் நகை கொள்ளையில் ஈடுபட்ட நபர்களை போலீசார் தேடி வந்தனர்.

இந்த நிலையில், கே.என்.பாளையம் அம்மன் கோவில் வீதியைச் சேர்ந்த மாதவன் (வயது 23), கோவை மேட்டுப்பாளையம் புஞ்சவன வீதியைச் சேர்ந்த அரவிந்தன் (வயது 23) ஆகிய இருவரையும் போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். போலீசார் விசாரணையில், கோவை மேட்டுப்பாளையம் அண்ணாச்சி நகரைச் சேர்ந்த அப்பாஸ் (வயது 33) என்பவரிடம் கொள்ளை போன தங்க நகைகளை கொடுத்து வைத்துள்ளது தெரியவந்தது.

இதனையடுத்து, அப்பாசையும் பிடித்து திருடிய நகைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். அப்பாஸ் மீது ஏற்கனவே 10க்கும் மேற்பட்ட வழக்குகளும், மாதவன் மற்றும் அரவிந்தன் மீது 2 வழக்குகளும் உள்ளதாக பங்களாப்புதூர் போலீசார் தெரிவித்தனர். மேலும், போலீசார் விசாரணையில் திருடிய தங்க நகைகளை 3 பேரும் கோவை காரமடை உள்ள ஒரு தனியார் பைனான்சில் அடகு வைத்து பணம் வாங்கி வந்தது தெரியவந்தது.

இதனையடுத்து, 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து கைது செய்த பங்களாப்புதூர் போலீசார் இரவு கோபி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மாவட்ட சிறையில் அடைத்தனர்.

Tags

Next Story
ஆள் இல்லாமலே இயங்கும் விமானம்,அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு