அந்தியூரில் பீர் குடிக்க மறுத்த டாஸ்மாக் பார் சப்ளையரை தாக்கிய மூவர் கைது

அந்தியூரில் பீர் குடிக்க மறுத்த டாஸ்மாக் பார் சப்ளையரை தாக்கிய மூவர் கைது
X

Erode news- கைது செய்யப்பட்ட மூவரை படத்தில் காணலாம்.

Erode news- ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே பீர் குடிக்க மறுத்த டாஸ்மாக் கடையின் பார் சப்ளையரை பீர் பாட்டிலால் தாக்கிய மூவரை போலீசார் கைது செய்தனர்.

Erode news, Erode news today- அந்தியூர் அருகே பீர் குடிக்க மறுத்த டாஸ்மாக் கடையின் பார் சப்ளையரை பீர் பாட்டிலால் தாக்கிய மூவரை போலீசார் கைது செய்தனர்.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் தேர்வீதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 44). இவர் அந்தியூர் - மந்தை சாலையில் செயல்படும் டாஸ்மாக் கடையின் பாரில் சப்ளையராக வேலை செய்து வருகிறார். இந்நிலையில், கெட்டிசமுத்திரம் வ.உ.சி நகரைச் சேர்ந்த இளையபாரதி (வயது 30) ஆறுமுகத்திடம் தான் வாங்கி கொடுக்கும் பீரை குடிக்குமாறு வற்புறுத்தியுள்ளார்.

இதனை ஆறுமுகம் மறுக்கவே, அப்போது அங்கு வந்த அந்தியூர் கோட்டைபெருமாள் கோவில் வீதியைச் சேர்ந்த ஹரிஹரன் (வயது 22), அந்தியூர் கோட்டையைச் சேர்ந்த அழகுராஜ் ஆகியோருடன் இளையபாரதி இணைந்து ஆறுமுகத்தை தகாத வார்த்தைகளால் பேசியுள்ளனர்.

மேலும், பீரை குடிக்கவில்லை என்றால் கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளனர். தொடர்ந்து, ஆறுமுகம் மறுக்கவே இளையபாரதி தன் வைத்திருந்த பீர் பாட்டிலால் ஆறுமுகத்தை தலையில் தாக்கியுள்ளார். இதில், ஆறுமுகத்துக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

இதனையடுத்து, அருகில் இருந்தவர்கள் ஆறுமுகத்தை மீட்டு அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்த புகாரின் பேரில், அந்தியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து இளையபாரதி, ஹரிஹரன் மற்றும் அழகுராஜ் ஆகிய மூவரையும் கைது செய்தனர்.

Tags

Next Story
குழந்தைகளின் இதயத்தை தாக்கும் கவாசாகி நோய் – காரணங்கள் மற்றும் தீர்வுகள்!