அதிமுக - பாஜக கூட்டணி முறிவுக்கு இதுதான் காரணம்: கே.சி.கருப்பணன் பரபரப்பு பேச்சு

அதிமுக - பாஜக கூட்டணி முறிவுக்கு இதுதான் காரணம்: கே.சி.கருப்பணன் பரபரப்பு பேச்சு
X

குருவரெட்டியூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் கே.சி.கருப்பணன்.

2026 தேர்தலில் அண்ணாமலையை முதல்வராக்க வேண்டுமென பாஜக கூறியதே கூட்டணி முறிவுக்கு காரணம் ஏற்பட்டதாக முன்னாள் அமைச்சரும், பவானி சட்டமன்றத் தொகுதி உறுப்பினருமான கே‌.சி.கருப்பணன் தெரிவித்துள்ளார்.

2026 தேர்தலில் அண்ணாமலையை முதல்வராக்க வேண்டுமென பாஜக கூறியதே கூட்டணி முறிவுக்கு காரணம் ஏற்பட்டதாக முன்னாள் அமைச்சரும், பவானி சட்டமன்றத் தொகுதி உறுப்பினருமான கே‌.சி.கருப்பணன் தெரிவித்துள்ளார்.

ஈரோடு மாவட்டம் பவானி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட குருவரெட்டியூரில் பேரறிஞர் அண்ணாவின் 115வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு முன்னாள் அதிமுக அமைச்சரும், பவானி சட்டமன்ற உறுப்பினருமான கே.சி. கருப்பணன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று சிறப்புரையாற்றினார்.

அப்போது அவர் பேசுகையில், 2024 பாராளுமன்ற தேர்தலில் அதிமுக பாஜக உடன் கூட்டணியாக இருக்க வேண்டுமாம். அதன் பின்னர் 2026 சட்டமன்ற தேர்தலில் அண்ணாமலையை முதல்வராக்க வேண்டும் என்று பாஜக கூறியதால் கூட்டணி துண்டிக்கப்பட்டது. இதனால் எடப்பாடியாருக்கும் அதிமுகவிற்கும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. மேலும், ஸ்டாலின் முப்பதாயிரம் கோடி லஞ்ச பணத்தை வைத்துக்கொண்டு என்ன செய்வது என்று தெரியாமல் இருக்கின்றார்.

ஸ்டாலின் அவர்களின் நிதி அமைச்சர் சொல்கிறார் என் முதல்வர் 30 ஆயிரம் கோடி லஞ்ச பணத்தை வைத்துக்கொண்டு என்ன செய்வது என்று தெரியாமல் உள்ளார் என்கிறார். மேலும், அவரது மகன் உதயநிதி சொன்னால்தான் தமிழகத்தில் எந்த திரைப்படமும் ரிலீஸ் செய்ய முடியும் ரஜினி படமாக இருந்தாலும், விஜய் படமாக இருந்தாலும் உதயநிதி சொல்லாமல் ரிலீஸ் ஆகாது.

ஒவ்வொரு படத்திற்கும் 50 கோடி 100 கோடி என கருப்பு பணத்தை வெள்ளை பணமாக்குவதே அவரது வேலை. கனிமொழி கார்த்திக் சிதம்பரம் ஆகிய இருவரின் கையில் தான் தங்க மார்க்கெட் உள்ளது. இவர்கள்தான் தங்கத்தை இறக்குமதி செய்கிறார்கள் இவர்களால் தான் தங்கம் விளையும் உயர்கிறது எனவும் குற்றம் சாட்டினார். இப்பொது கூட்டத்தில் அதிமுக மாவட்ட, ஒன்றிய, கிளை கழக நிர்வாகிகள் தொண்டர்கள் பொதுமக்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.

Tags

Next Story
ஏஐ ஆல் மனிதர்களுக்கு ஆபத்தா? உண்மை என்ன?