அத்தாணி, கீழ்வாணி பகுதிகளில் வரும் செப்.26ம் தேதி மின்சாரம் நிறுத்தம்

அத்தாணி, கீழ்வாணி பகுதிகளில் வரும் செப்.26ம் தேதி மின்சாரம் நிறுத்தம்
X

மின்தடை (பைல் படம்).

ஈரோடு மாவட்டம் அத்தாணி துணை மின் நிலையத்தில் வருகிற செப்டம்பர் 26ம் தேதி செவ்வாய்க்கிழமை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

அத்தாணி துணை மின் நிலையத்தில் வருகிற செப்டம்பர் 26ம் தேதி செவ்வாய்க்கிழமை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. ஆகையால், இந்த பகுதிகளில் மின்சாரம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள அத்தாணி துணை மின் நிலையத்தில் வரும் செப்டம்பர் 26ம் தேதி செவ்வாய்க்கிழமை மாதப் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் மின்தடை செய்யப்படும் என்று மின் வாரியம் அறிவித்துள்ளது.

அதன்படி, மின்வாரியம் சார்பில், மின் கம்பங்கள், மின்மாற்றிகளில் உள்ள பழுது மற்றும் செடி கொடிகளை அகற்றும் பணி நடக்க இருக்கிறது. மேலும், இதை சரிசெய்து பின்னர் சீரான மின் விநியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட இருக்கிறது.

இதனால், பொதுமக்கள் மின் தேவை இருப்பின் மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன், மின்வாரிய ஊழியர்களுக்கு சிரமம் கொடுக்காமல் உங்கள் பணிகளை செய்யுமாறும், அவர்களுக்கு நல் ஒத்துழைப்பு தருமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

அத்தாணி துணை மின் நிலையம் (காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை):-

மின்விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:- அத்தாணி டவுன், கைகாட்டிப் பிரிவு தம்பங்கரடு, கொண்டையம்பாளையம், நகலூர், முனியப்பம்பாளையம், அத்தாணி, பெருமாபாளையம், குண்டுமூப்பனூர், வீரனூர், கரட்டூர், கீழ்வாணி, போகநாயக்கனூர், கேத்தநாயக்கனூர், டி.ஆர்.காலனி, இந்திராநகர், செம்புளிச்சாம்பாளையம், மூங்கில்பட்டி, சவண்டப்பூர் ஏ.சி. காலனி, பெருமுகை, ராமலிங்கபுரம், குப்பாண்டம்பாளையம், பெருமாள்கோயில்புதூர் மற்றும் அந்தியூர் குடிநீர் விநியோக்கப்படும் பகுதிகள் ஆகிய பகுதிகளில் மின்சாரம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
நைட்ல இதெல்லாம் சாப்பிட கூடாதா...? அச்சச்சோ !.. இது தெரியாம இருந்துடீங்களே !