தாளவாடி அருகே அரசு பேருந்து பயணிகளை மிரட்டிய ஒற்றை காட்டு யானை

தாளவாடி அருகே அரசு பேருந்தை வழிமறித்து பயணிகளை அலறவிட்ட ஒற்றை காட்டு யானை.
தாளவாடி அருகே திடீரென வேகமாக ஓடிவந்து அரசு பேருந்து பயணிகளை அலறவிட்ட காட்டு யானையால் பரபரப்பு ஏற்பட்டது.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனச்சரகங்களுக்கு உட்பட்ட வனப்பகுதிகளில் ஏராளமான யானைகள், சிறுத்தைப்புலிகள், கரடிகள். செந்நாய்கள், மான்கள் உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் காணப்படுகின்றன.
தற்போது வனப்பகுதிகளில் கடுமையான வறட்சி நிலவுகிறது. இதனால் வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீரை தேடி வனப்பகுதிகளில் இருந்து வெளியேறி அருகே உள்ள கிராமங்களுக்குள் புகுந்து விவசாய நிலங்களை சேதப்படுத்தும், யானைகள் சாலையோரங்களில் வந்து நின்றுகொண்டு வாகனங்களை வழி மறிப்பதும் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், தலமலையில் இருந்து தாளவாடி வரை செல்லக்கூடிய அரசு பேருந்து வனச்சாலை வழியாக சென்று கொண்டு இருந்தது. அப்போது, நெய்தாளபுரம் கிராமத்தில் பயணிகளை ஏற்றிக்கொண்டு முதியனூர் சென்று கொண்டிருந்த அரசு பேருந்தை வழிமறித்து திடீரென ஒரு காட்டு யானை சாலையின் குறுக்கே வந்து நின்றது.
தொடர்ந்து, பேருந்தை பார்த்து நோக்கி வேகமாக ஓடி வந்தது மிரட்டியது. பின்னர், சிறிது நேரம் கழித்து காட்டு யானை மீண்டும் வனப்பகுதிக்குள் சென்றது. அதன் பிறகு பேருந்து தாளவாடி நோக்கி சென்றது. தற்போது இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu