பவானி - மேட்டூர் சாலையில் சுங்கச்சாவடி அமைக்க மரங்கள் வெட்டி அகற்றம்

அம்மாபேட்டை அருகே சுங்கசாவடி அமைக்க சாலையோர மரங்கள் வெட்டி அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
பவானி - மேட்டூர் சாலையில் அம்மாபேட்டையில் கட்டண சுங்கச்சாவடி அமைக்க மரங்கள் வெட்டி அகற்றும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப வாகனங்கள் அதிகரிக்கும்போது தரமான தார்சாலையும், பேருந்து, லாரி, வேன்கள், கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் என போக்குவரத்து அதிகரிக்கும் போது சாலை மேம்பாட்டுப் பணிகளும் செய்யப்படுகிறது. அதன்படி தற்போது ஈரோடு - பவானி - மேட்டூா் - தொப்பூா் வரையிலான சாலை தேசிய நெடுஞ்சாலையாக மாற்ற சாலை விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக, ஏற்கனவே ஈரோடு மாவட்டத்தில், சின்னப்பள்ளம் வரையில் சாலையின் இருபுறங்களிலும் 950 மரங்கள் வெட்டப்பட்டன.
இந்த நிலையில், அம்மாபேட்டை அருகே கட்டண சுங்கச்சாவடி அலுவலகம் கட்டப்பட உள்ளது. இருவழி சாலையாக உள்ள இந்த சாலையில் வரும் வாகனங்கள் சுங்கச்சாவடிக்குள் நுழைந்து வெளியேறும் வகையில் சாலை அகலப்படுத்தப்படுகிறது. இதனால், சுங்கச்சாவடி அருகாமையில் சாலையின் இருபுறங்களிலும் உள்ள மரங்கள் வெட்டி அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மொத்தம் 104 மரங்களை வெட்டி அகற்ற ஏலம் விடப்பட்ட நிலையில், தற்போது பொக்லைன் இயந்திரம் உதவியுடன் தொழிலாளர்கள் மரத்தை வெட்டி அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஏற்கெனவே, 950 மரங்கள் வெட்டப்பட்ட நிலையில், மேலும் 104 மரங்கள் வெட்டப்படுவது அப்பகுதி மக்களை அதிா்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu