பவானிசாகர் அணையில் 93 அடிக்கும் கீழே சரிந்த நீர்மட்டம்

பவானிசாகர் அணையில் 93 அடிக்கும் கீழே சரிந்த நீர்மட்டம்
X

பவானிசாகர் அணை (பைல் படம்).

பவானிசாகர் அணையின் முழு நீர்மட்டமான 105 அடியில் இருந்து இன்று (சனிக்கிழமை) நீர்மட்டம் 93 அடிக்கும் கீழே சரிந்துள்ளது.

ஈரோடு மாவட்டத்தில், முக்கிய அணையாக விளங்குவது பவானிசாகர் அணை. இந்த அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 105 அடியாகும். அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரால் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களை சேர்ந்த 2 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.

இதுதவிர, ஈரோடு மாவட்டத்தின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்குவது பவானிசாகர் அணையாகும். இந்நிலையில், கடந்த சில வாரங்களாக அணைக்கு வரும் நீர் வரத்தை காட்டிலும் பாசனத்திற்காக அதிக அளவு தண்ணீர் திறக்கப்பட்டு வருவதால் பவானிசாகர் அணையின் நீர்மட்டம், வேகமாக சரிந்து வருகிறது. தற்போது, அணையின் நீர்மட்டம் 93 அடிக்கும் கீழே சென்றுவிட்டது.

இன்று (மார்.,11) சனிக்கிழமை காலை 8 மணி நிலவரப்படி அணையின் நீர்மட்ட நிலவரம்:-

நீர் மட்டம் - 92.90 அடி ,

நீர் இருப்பு - 23.52 டிஎம்சி ,

நீர் வரத்து வினாடிக்கு - 756 கன அடி ,

நீர் வெளியேற்றம் வினாடிக்கு - 2,700 கன அடி ,

கீழ்பவானி வாய்க்காலில் பாசனத்திற்காக வினாடிக்கு 2,200 கன அடி நீரும், காலிங்கராயன் வாய்க்காலில் பாசனத்திற்காக 300. கன அடி நீரும், பவானி ஆற்றில் குடிநீருக்காக 200 கன அடி நீரும் திறக்கப்பட்டுள்ளது.

மேலும், பவானிசாகர் அணை பகுதியில் மழைப்பொழிவு இல்லை.

Tags

Next Story
future of ai in retail