ஈரோட்டில் உக்கிர தாண்டவம் ஆடும் வெயில்: இன்று 108.68 டிகிரி பதிவு

Erode news- வாட்டி வதைக்கும் வெயில் (கோப்புப் படம்).
Erode news, Erode news today- ஈரோட்டில் நாளுக்கு நாள் வெயில் உக்கரம் அதிகரித்து அனல் காற்று வீசுவதால், பொதுமக்கள் வெளியில் தலை காட்டவே அஞ்சி வீடுகளில் முடங்கினர்.
ஈரோடு மாவட்டத்தில் கோடை வெயில் மக்களை வறுத்தெடுத்து வருகிறது. இன்னும் ஓரிரு நாட்களில் அக்னி நட்சத்திரம் துவங்க உள்ளது. அதற்கு முன்பே கடுமையான வெயில் மக்களை வாட்டி வதைக்கிறது. இதனால் பகல் நேரங்களில் மக்கள் வீட்டிலேயே முடங்கி கிடக்கும் நிலை உள்ளது.
நண்பகல் நேரத்தில் சாலைகளில் வாகன மற்றும் மக்கள் நடமாட்டம் குறைவாக உள்ளது. இரவு நேரத்திலும் புழுக்கம் காரணமாக மக்கள் அவதிப்படுகின்றனர். பகல் நேரத்தில் இளைஞர்கள் உள்ளிட்டோர் நீர்நிலைகளை தேடிச் சென்று குளித்து வருகின்றனர்.
இந்நிலையில், மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக வெயில் உச்சத்தை தொட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த சில தினங்களுக்கு முன், மாவட்டத்தில் இதுவரை இல்லாத அளவாக வெயில் அளவு, 109.4 டிகிரி பாரன்ஹீட் பதிவானது. நேற்று 107.6 பாரன்ஹீட் பதிவான நிலையில், இன்று வெயிலின் தாக்கம் மேலும் அதிகரித்து, 108.68 டிகிரி பாரன்ஹீட்டாக உயர்ந்தது.
இதனால், ஏரி, குளங்களில் இருந்த தண்ணீர் வெகுவாக குறைந்து வறண்டு விட்டது. வன பகுதிகளில் உள்ள மரங்கள் மட்டுமின்றி, விவசாய நிலங்களிலும் தண்ணீர் இல்லாததால் தென்னை, மா உள்ளிட்ட மரங்களும் காய்ந்து வர தொடங்கியுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu