அந்தியூர் அருகே மனைவி பிரிந்ததால் சலூன் கடைகாரர் தூக்கிட்டு தற்கொலை

அந்தியூர் அருகே மனைவி பிரிந்ததால் சலூன் கடைகாரர் தூக்கிட்டு தற்கொலை
X

பைல் படம்

அந்தியூர் அருகே மனைவி பிரிந்து சென்றதால் சலூன் கடை உரிமையாளர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் தவிட்டுப்பாளையம் பழனியப்பா 3வது வீதியை சேர்ந்தவர் ஈஸ்வரன்.இவருக்கும் அத்தாணி அருகே உள்ள கள்ளிப்பட்டியை சேர்ந்த சுகந்தி என்பவருக்கும் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.தவிட்டுபாளையத்தில் வசித்துக் கொண்டு அந்தியூர் அருகே உள்ள நகரில் ஈஸ்வரன் சலூன் கடை நடத்தி வந்தார்.குடிப்பழக்கம் உள்ள ஈஸ்வரனிடம் கோபித்துக்கொண்டு கடந்த 10 நாட்களுக்கு முன்பு சுகந்தி தனது அம்மா வீட்டிற்கு சென்றார்.

இந்நிலையில் மனைவி பிரிந்த சோகத்தில் இருந்த ஈஸ்வரன், நேற்று இரவு தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.தகவல் அறிந்த அந்தியூர் போலீசார் பிரேதத்தை மீட்டு அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து அந்தியூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!