/* */

கோபிசெட்டிபாளையம் மகளிர் காவல் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம்

கோபிசெட்டிபாளையம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி தஞ்சமடைந்தனர்.

HIGHLIGHTS

கோபிசெட்டிபாளையம் மகளிர் காவல் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம்
X

தஞ்சமடைந்த காதல் ஜோடி தேவராஜ்- சுபஸ்ரீ.

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள வாய்க்கால்ரோடு பகுதியை சேர்ந்தவர் லட்சுமணன் மகன் தேவராஜ். ஐடிஐ படித்துள்ள தேவராஜ் மார்க்கெட்டிங் பிரிவில் வேலை செய்து வருகிறார்.

தேவராஜ் கடந்த சில மாதங்களுக்கு முன்பு, கோவில்பட்டி சென்றுள்ளார். அப்போது, திருநெல்வேலி மாவட்டம் காந்திநகர் அருகே உள்ள சேக்மாதர் நகரை சேர்ந்த கருப்புசாமி மகள் சுபஸ்ரீ என்பவருடன் அறிமுகம் ஆகி உள்ளனர். சுபஸ்ரீ டிப்ளமோ படித்துள்ளார். இவரும் இன்ஸ்டாகிராம் மூலம் பழகி வந்துள்ளனர்.

இந்நிலையில், வீட்டை விட்டு வெளியேறிய சுபஸ்ரீ கோபிசெட்டிபாளையம் வந்துள்ளார். பின்னர், இருவரும் பொள்ளாச்சியில் உள்ள ஒரு கோவிலில் நண்பர்கள் உதவியுடன் திருமணம் செய்து கொண்டனர். இதனையடுத்து, இருவரும் பாதுகாப்பு கேட்டு, கோபிசெட்டிபாளையம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தஞ்சமடைந்தனர்.

அதனைத் தொடர்ந்து, இருவரின் பெற்றோரையும் வரவழைத்த, மகளிர் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் வர்னியா அவர்களிடம் விசாரணை நடத்தினர். சுபஸ்ரீயின் பெற்றோர் இதனை ஏற்க மறுத்தனர். ஆனால், தேவராஜின் பெற்றோர் இதனை ஏற்றுக்கொண்டனர். இதனையடுத்து, இருவரும் தேவராஜின் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதனால், கோபி மகளிர் காவல் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Updated On: 4 April 2022 11:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அருமையான தோழமைக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து
  2. கல்வி
    தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் பட்ட மற்றும் பட்டய படிப்புகள்
  3. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தில் மந்திரி மாதிரி வாழணுமா? அடிக்கடி முந்திரி
  4. லைஃப்ஸ்டைல்
    தனக்கென வாழாமல் நமக்கென வாழும் தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து
  5. தமிழ்நாடு
    மணிக்கு 200 கி. மீ.வேகம்: பறக்கும் டாக்சி தயாரிக்கும் முயற்சியில்...
  6. லைஃப்ஸ்டைல்
    ருசியான சில்லி பரோட்டா செய்வது எப்படி?
  7. லைஃப்ஸ்டைல்
    குழம்பு மிளகாய் பொடி வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?
  8. திருச்சிராப்பள்ளி மாநகர்
    கை நழுவி போகிறதா? திருச்சி பஞ்சப்பூரில் அமைய உள்ள ஒலிம்பிக் அகாடமி
  9. ஆன்மீகம்
    தியாகத் திருநாளாம் பக்ரீத் வாழ்த்து சொல்லலாம் வாங்க
  10. கோவை மாநகர்
    கோவை மாநகரில் ஒரு மணி நேரம் கனமழை ; மக்கள் மகிழ்ச்சி