பண்ணாரி அருகே தாயை இழந்த குட்டி யானை மற்றோரு கூட்டத்துடன் சேர்ப்பு

Erode news- மற்றோரு யானைக் கூட்டத்துடன் குட்டி யானை பண்ணாரி- திம்பம் சாலையை கடந்து சென்ற காட்சி.
Erode news, Erode news today- பண்ணாரி அருகே தாயை இழந்த குட்டி யானை மற்றோரு யானைக் கூட்டத்துடன் சேர்ந்தது.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பக பண்ணாரி வனப்பகுதியில் 2 மாத குட்டியுடன் வந்த 40 வயது மதிக்கத்தக்க தாய் யானை உடல் நலக்குறைவால் மயங்கி விழுந்தது. தாய் யானைக்கு வனத்துறையினர் சிகிச்சை அளித்து வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.
இதனையடுத்து, உயிரிழந்த யானையின் குட்டியான 2 மாத பெண் யானையை, மற்றோரு யானைக் கூட்டத்துடன் சேர்த்து விட்டுள்ள வனத்துறையினர், குட்டி யானையின் நடமாட்டம் குறித்து கண்காணித்து வருகின்றனர். இதனிடையே மற்றொரு யானை கூட்டத்தோடு சேர்ந்த குட்டி யானை, பண்ணாரி- திம்பம் சாலையை கடந்து சென்ற வீடியோவை வனத்துறையினர் வெளியிட்டுள்ளனர்.
இதுகுறித்து சத்தியமங்கலம் புலிகள் காப்பக கள இயக்குனர் ராஜ்குமார் கூறியதாவது:-
சத்தியமங்கலம் வனப்பகுதிக்குள் விடப்பட்ட குட்டி யானை நேற்று காலை மற்றொரு யானைக் கூட்டத்துடன் சேர்ந்து விட்டது. சாதாரணமாக ஒரு குட்டி யானையை மற்றொரு கூட்டத்தை சேர்ந்த யானை கள் சேர்த்துக் கொள்ளாது. ஆனால் மற்றொரு கூட்டத்தை சேர்ந்த தாய் யானை இந்த குட்டி யானையை சேர்த்துக்கொண்டு அரவணைத்து சென்றது.
இதனால், குட்டி யானையை யானைகள் வளர்ப்பு முகாமிற்கோ அல்லது வன உயிரியல் பூங்காவிற்கோ கொண்டு செல்வது தவிர்க்கப்பட்டுள்ளது. இதுபோன்று தாய் யானையை இழந்த குட்டி யானையை மற்ற பெண் யானையுடன் சேர்க்கப்பட்டுள்ளது இதுவே முதல் முறை. இது ஒரு அரிதான நிகழ்வாகும். மிகவும் வியப்பாக இருந்தது. ஒரு வேளை இந்த யானைகளுக்கு ஏதாவது உறவு இருக்கலாம் என நினைக்கிறோம். தொடர்ந்து குட்டி யானையின் நடமாட்டத்தை கண்காணித்து வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu