அந்தியூர் பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளில் ஆய்வு செய்தார் எம்.எல்.ஏ.

அந்தியூர் பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளில் ஆய்வு செய்தார் எம்.எல்.ஏ.
X

அந்தியூர் பகுதி ரேஷன் கடைகளில் ஆய்வு செய்தார் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடாசலம்.

அந்தியூர் பகுதியில் உள்ள நியாய விலை கடைகளில் பொங்கல் சிறப்பு தொகுப்பு வழங்கும் பணியை எம்.எல்.ஏ. ஆய்வு மேற்கொண்டார்.

தமிழக அரசின் சார்பில் வழங்கப்படும் இருபத்தி ஒரு பொருட்கள் அடங்கிய பொங்கல் சிறப்பு தொகுப்பு பெறாதவர்களுக்கு இன்று முதல் மீண்டும் வழங்கப்பட வேண்டும் என்று தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்து இருந்தது.

அதன்படி, ஈரோடு மாவட்டம் அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜி.வெங்கடாசலம் எம்.எல்.ஏ. தனது தொகுதிக்குட்பட்ட அந்தியூர் பேரூராட்சி மற்றும் தவிட்டுப்பாளையம் பகுதியில் உள்ள நியாய விலைக் கடைகளில் பொங்கல் சிறப்பு தொகுப்பில் உள்ள பொருட்களின் எடை மற்றும் தரம் குறித்து திடீ‌ரென ஆய்வு மேற்கொண்டார்.

மேலும் அனைத்துப் பொருட்களும் முறையாக வழங்கப்படுகிறதா என்பது குறித்து அந்த பகுதில் உள்ள பொதுமக்களிடம் கேட்டறிந்தார்.அப்போது ரேஷன் கடையில் முக கவசம் அணியாமல் இருந்த மக்களுக்கு முகக்கவசம் வழங்கி, முகக்கவசம் அவசியம் குறித்து அறிவுரை வழங்கினார்

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!