அந்தியூர் அரசு பெண்கள் பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டும் பணி தொடங்கி வைத்த எம்எல்ஏ
அந்தியூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டடம் கட்டும் பணியை எம்எல்ஏ ஏ.ஜி.வெங்கடாசலம் பூமி பூஜை செய்து தொடங்கி வைத்த போது எடுத்த படம்.
Erode Today News,Erode News, Erode Live Updates - அந்தியூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் கூடுதல் வகுப்பறை கட்டடம் கட்டும் பணியை சட்டமன்ற உறுப்பினா் ஏ.ஜி.வெங்கடாசலம் இன்று (9ம் தேதி) தொடங்கி வைத்தார்.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நபார்டு திட்டத்தின் கீழ், கூடுதல் வகுப்பறை கட்டங்கள் கட்டுவதற்கு ரூ.1 கோடியே 12 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த கட்டடம் கட்டும் பணி தொடக்க விழாவுக்கு சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜி.வெங்கடாசலம் தலைமை வகித்து கட்டடம் கட்டும் பணியை பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.
இவ்விழாவில், பேரூர் திமுக செயலாளர் எஸ்.கே.காளிதாஸ், ஈரோடு வடக்கு மாவட்ட திமுக விவசாய அணி மாவட்ட துணை அமைப்பாளர் விவேகம் பாலுச்சாமி, பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் பழனிச்சாமி, திமுக தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர் நாகராஜ் மற்றும் ஆசிரியர்கள், மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu