ஈரோட்டில் ரூ.50 லட்சத்தில் ஓடைகள் தூர்வாரும் பணி: தொடங்கி வைத்த அமைச்சர்
Erode News- சேனாதிபதிபாளையம் ஓடை தூர்வாரும் பணியினை அமைச்சர் முத்துசாமி தொடங்கி வைத்த போது எடுத்த படம்.
Erode News, Erode News Today- ஈரோட்டில் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் ஓடைகள் தூர்வாரும் பணியினை அமைச்சர் முத்துசாமி இன்று (4ம் தேதி) தொடங்கி வைத்தார்.
ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட 3 மற்றும் 4ம் மண்டலத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் ஓடைகள் தூர்வாரும் பணிகளை வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சு.முத்துசாமி இன்று (4ம் தேதி) தொடங்கி வைத்தார்.
மழைக்காலங்களில் ஓடைகளில் நீர் சீராக செல்வதற்கு ஏதுவாகவும், வடகிழக்கு பருவமழையை கருத்தில் கொண்டு முன்னேற்பாடாக, ஈரோடு மாநகராட்சி, 3 மற்றும் 4ம் மண்டலங்களுக்கு உட்பட்ட, காசிபாளையம் ஓடை 2 கி.மீ நீளத்திற்கும். சேனாதிபதிபாளையம் ஓடை 2 கி.மீ நீளத்திற்கும். சத்யா நகர் ஓடை 2.1 கி.மீ நீளத்திற்கும், சாஸ்திரி நகர் ஓடை 2.2 கி.மீ நீளத்திற்கும் என சுமார் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில், தூர்வாரும் பணிகளை வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் தொடங்கி வைத்தார்.
இப்பணியானது, ஈரோடு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, இந்தியன் பப்ளிக் ஸ்கூல், ப்ளூ லீப் கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் ஆகியோரின் பங்களிப்புடன் மேற்கொள்ளப்படுகிறது. இந்நிகழ்வின் போது, ஈரோடு மாநகராட்சி மேயர் சு.நாகரத்தினம், ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் மனிஷ், துணை மேயர் வே.செல்வராஜ், மாநகர பொறியாளர் விஜயகுமார் மற்றும் மாமன்ற உறுப்பினர் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu