ஈரோடு நாடாளுமன்றத் தொகுதி காலி: மக்களவைச் செயலகம் அறிவிப்பு

ஈரோடு நாடாளுமன்றத் தொகுதி காலி: மக்களவைச் செயலகம் அறிவிப்பு
X

Erode news- ஈரோடு எம்பி தொகுதி காலியாக உள்ளதாக மக்களவைச் செயலகம் அறிவித்துள்ளது. (மாதிரி படங்கள்)

Erode news- ஈரோடு நாடாளுமன்றத் தொகுதி காலியாக உள்ளது என மக்களவைச் செயலகம் அறிவித்துள்ளது.

Erode news, Erode news today- ஈரோடு நாடாளுமன்றத் தொகுதி காலியாக உள்ளது என மக்களவைச் செயலகம் அறிவித்துள்ளது.

ஈரோடு மாவட்டம் அவல்பூந்துறை குமாரவலசு கிராமத்தை சேர்ந்தவர் அ.கணேசமூர்த்தி (77). ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார். மதிமுக மூத்த நிர்வாகிகளில் ஒருவரான இவர் கடந்த மார்ச் 24ம் தேதி உடல் நலம் பாதிக்கப்பட்டது. பின்னர், ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

தொடர்ந்து, மேல்சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, தீவிர சிகிச்சை பெற்று வந்த எம்பி கணேசமூர்த்தி கடந்த மார்ச் 28ம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரின் மறைவுக்கு அரசியல் தலைவர்கள் பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், ஈரோடு நாடாளுமன்றத் தொகுதி காலியாக உள்ளது என மக்களவைச் செயலகம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக மக்களவைச் செயலகம் வெளியிட்டுள்ள அரசிதழில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தின் ஈரோடு நாடாளுமன்றத் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஏ.கணேசமூர்த்தி கடந்த மாதம் 28ம் தேதி கோயம்புத்தூரில் காலமானார். இதனையடுத்து அன்றைய தேதியிலிருந்து அவரது மக்களவை இடம் காலியாகி விட்டது.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Tags

Next Story
ai solutions for small business