சரிந்து வரும் பவானிசாகர் அணையின் நீர்வரத்து

சரிந்து வரும் பவானிசாகர் அணையின் நீர்வரத்து
X

பவானிசாகர் அணைப் பகுதி.

பவானிசாகர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால், அணைக்கு நீர்வரத்து 7,594 கன அடியாக சரிந்துள்ளது.

பவானிசாகர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால், அணைக்கு நீர்வரத்து 7,594 கன அடியாக சரிந்துள்ளது.

ஈரோடு மாவட்டம் பவானிசாகரில் கட்டப்பட்டுள்ள கீழ்பவானி அணை எனப்படும் பவானிசாகர் அணை 105 அடி உயரமும், 32.8 டிஎம்சி கொள்ளளவும் கொண்டாகும். தமிழகத்தின் 2வது பெரிய மண் அணையாக விளங்கும் இந்த அணை ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரமாக திகழ்கிறது.

இந்நிலையில், அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான நீலகிரி மலைப்பகுதியில் கடந்த 5 நாட்களாக கன மழை பெய்தது. இதனால், அணைக்கு வந்து சேரும் பவானி ஆறு மற்றும் மாயாற்றில் நீர்வரத்து அதிகரித்து, அணையின் நீர்மட்டம் உயர்ந்தது. இதில் கடந்த ஐந்து நாட்களில் மட்டும் பவானிசாகர் அணைக்கு, 6 டிஎம்சி தண்ணீர் வந்தது.

இதனிடையே, நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் அணைக்கு வரும் நீரின் அளவு சரிந்து வருகிறது. நேற்று (20ம் தேதி) காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 13,163 கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்று (21ம் தேதி) காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 7,594 கன அடியாக சரிந்தது.

அதேசமயம், அணையின் நீர்மட்டம் நேற்று காலை 82.27 அடியாக இருந்த நிலையில், இன்று காலை 83.50 அடியாக உயர்ந்தது. அதேபோல், அணையில் நீர் இருப்பு 16.91 டிஎம்சியிலிருந்து 17.61 டிஎம்சியாக அதிகரித்தது.

அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் வினாடிக்கு 5 கன அடி நீரும், அரக்கன் கோட்டை - தடப்பள்ளி வாய்க்காலில் வினாடிக்கு 600 கன அடி நீரும், காலிங்கராயன் வாய்க்காலில் வினாடிக்கு 500 கன அடி நீரும், குடிநீர் தேவைக்காக பவானி ஆற்றில் வினாடிக்கு 100 கன அடி நீரும் என மொத்தம் வினாடிக்கு 1,205 கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்