/* */

அம்மாபேட்டை அருகே வழிவிட மறுத்த அரசு பேருந்தின் கண்ணாடி உடைப்பு

அம்மாபேட்டை அருகே முந்தி செல்ல வழிவிட மறுத்த அரசு பேருந்தின் கண்ணாடியை உடைத்த வாலிபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

HIGHLIGHTS

அம்மாபேட்டை அருகே வழிவிட மறுத்த அரசு பேருந்தின் கண்ணாடி உடைப்பு
X

அரசு பேருந்தின் கண்ணாடி உடைந்திருப்பதை படத்தில் காணலாம்.

ஈரோடு மாவட்டம் பவானி அருகே அம்மாபேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் திருப்பூரில் இருந்து தர்மபுரி நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பேருந்தை தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி பகுதியை சேர்ந்த சக்திவேல் என்பவர் ஓட்டி வந்துள்ளார்.இந்நிலையில் நெரிஞ்சிப்பேட்டை பகுதியில் பேருந்து மேட்டூர் நோக்கி சென்று கொண்டிருந்தது.அப்போது, பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த நபர் பேருந்தை முந்திச் செல்ல முயன்றுள்ளார்.இருப்பினும் வழி இல்லாததால் பேருந்து ஓட்டுனர் இருசக்கர வாகனத்திற்கு வழிவிடாமல் சென்றுள்ளார்.இதையடுத்து ஆத்திரமடைந்த இருசக்கர வாகனத்தில் சென்ற நபர் பேருந்தை முந்திச் சென்ற பேருந்தை வழிமறித்து வாகனத்தை குறுக்கே நிறுத்தி சாலையில் கிடந்த கல்லை எடுத்து பேருந்தின் முன்பக்க கண்ணாடி மீது வீசி கண்ணாடியை உடைத்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார்.


இதையடுத்து பேருந்தில் பயணித்த 30க்கும் மேற்பட்ட பயணிகளை அவ்வழியாக வந்த மற்றொரு அரசு பேருந்து மூலம் ஓட்டுனரும் நடத்துனரும் அனுப்பி வைத்துவிட்டு பேருந்து கண்ணாடி உடைத்த கல் மற்றும் பேருந்து டன் அம்மாபேட்டை காவல் நிலையத்திற்கு வந்த ஓட்டுனர் மற்றும் நடத்துனர் பேருந்து கண்ணாடி உடைத்து சேதப்படுத்தி விட்டு தப்பி ஓடிய நபர் மீது புகார் கொடுத்தனர்.

இதையடுத்து வழக்கு பதிவு செய்த போலீசார் அரசு பேருந்து மீது கல்வீசி கண்ணாடியை உடைத்து விட்டு தப்பி ஓடிய நபரை தேடி வருகின்றனர். .

Updated On: 22 Jun 2022 10:00 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    உடுமலையில் தண்ணீரின்றி வறண்ட பஞ்சலிங்க அருவி; ஏமாற்றத்தில் சுற்றுலா ...
  2. திருப்பூர்
    திருப்பூர்; 4 மையங்களில் 'நீட்' தேர்வெழுதிய மாணவ மாணவியர்
  3. ஆன்மீகம்
    சாய்பாபாவின் காலமற்ற ஞானம் - ஒரு வழிகாட்டும் ஒளி!
  4. லைஃப்ஸ்டைல்
    சிரிப்பு வருது சிரிப்பு வருது சிரிக்க சிரிக்க சிரிப்பு வருது!
  5. லைஃப்ஸ்டைல்
    ‘நதியில் விளையாடி கொடியில் தலை சீவி நடந்த இளந் தென்றலே...’
  6. லைஃப்ஸ்டைல்
    புலிக்கு வாலாக இருப்பதைவிட எலிக்கு தலையாக இரு..!
  7. லைஃப்ஸ்டைல்
    கர்ப்பம் பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  8. நாமக்கல்
    நாமக்கல் மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வில் 14 அரசு பள்ளிகள் உள்பட 60...
  9. நாமக்கல்
    நாமக்கல் குறிஞ்சி மேல்நிலைப்பள்ளி பிளஸ் 2 தேர்வில் 100 சதவீதம்...
  10. லைஃப்ஸ்டைல்
    யாரையும் நம்பாதே: சிறந்த 50 தமிழ் மேற்கோள்கள்!