பத்திரப்பதிவு வழிகாட்டி மதிப்பை 5% லிருந்து 10% ஆக உயர்த்த நில முகவர்கள் கோரிக்கை
ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்த ஈரோடு மாவட்ட நில முகவர்கள் மற்றும் தரகர்கள் நலச்சங்க நிர்வாகிகள்.
பத்திரப்பதிவு வழிகாட்டி மதிப்பீட்டை 5% லிருந்து 10% ஆக உயர்த்துமாறு ஈரோடு மாவட்ட நில முகவர்கள் மற்றும் தரகர்கள் நலச்சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
ஈரோடு மாவட்ட நில முகவர்கள் மற்றும் தரகர்கள் நல சங்க தலைவர் செல்வமணி, செயலாளர் ராஜு, பொருளாளர் வைரமணி ,சட்ட ஆலோசர்கள் தங்க வேலு, வீரக்குமார் மற்றும் நிர்வாகிகள் ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு ஒன்றை அளித்தனர்.
அந்த மனுவில், தமிழக அரசு தற்போது அரசு வழிகாட்டி மதிப்பு 70 சதவீதம் வரை உயர்த்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே முத்திரைக் கட்டணம் மற்றும் பதிவு கட்டணம் உயர்ந்துள்ள நிலையில் தமிழக அரசு கொண்டுவரும் 70 சதவீதம் அரசு வழிகாட்டி மதிப்பின் உயர்வால் 10 வருடங்களுக்கு தொழில் மற்றும் தொழிலாளர்கள் பாதிக்கும் சூழ்நிலை ஏற்படும்.
மேலும், கட்டுமானத் துறை முதல் ரியல் எஸ்டேட் வரை அனைத்து துறை பொதுமக்களும் பாதிப்பு இல்லாமல் இருக்க தமிழக அரசு கொண்டு வரும் நடைமுறையை 5 சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாக உயர்த்தி பொதுமக்களை காப்பாற்றுமாறும் சாதாரண பொதுமக்கள் இடம் வாங்குவதே கனவாக மாறும் சூழ்நிலையை தவிர்க்கவும் பொதுமக்கள் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.
தமிழக அரசு வழிகாட்டி மதிப்பு உயர்த்தப்படுவதால் கட்டிட தொழிலாளர்கள், பெயிண்ட் அடிக்கும் தொழிலாளர்கள், சுமை தூக்கும் தொழிலாளர்கள், வீடு கட்டி விற்பவர்கள், பத்திர விற்பனையாளர்கள், சுமை தூக்கும் வாகன ஓட்டிகள் உட்பட ஏராளமான தொழிலாளர்கள் பாதிக்கப்படுவார்கள். எனவே அரசு வழிகாட்டி மதிப்பு 70 சதவீதம் உயர்த்தப்படுவதை மறு பரிசீலனை செய்யும்படி கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu