ஈரோடு புத்தகத் திருவிழா நிறைவு: 5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வருகை
Erode News-ஈரோடு புத்தகத் திருவிழா நிறைவு நாளான நேற்று செய்தியாளர்கள் சந்திப்பு கூட்டத்தில் மக்கள் சிந்தனைப் பேரவை தலைவர் ஸ்டாலின் குணசேகரன் பேசினார். அருகில் செயலாளர் அன்பரசு உள்ளார்.
Erode News, Erode News Today- ஈரோடு புத்தக திருவிழாவுக்கு 5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வருகை புரிந்து, ரூ.5 கோடி ரூபாய் மதிப்பிலான புத்தகங்களை வாங்கி சென்றுள்ளனர் என்று மக்கள் சிந்தனைப் பேரவை தலைவர் ஸ்டாலின் குணசேகரன் தெரிவித்துள்ளார்.
ஈரோடு வீரப்பன்சத்திரம் அருகே உள்ள சிக்கய்ய நாயக்கர் கல்லூரி வளாகத்தில் தமிழ்நாடு அரசு மற்றும் மக்கள் சிந்தனை பேரவை இணைந்து நடத்திய 20வது ஈரோடு புத்தகத் திருவிழா கடந்த 2ம் முதல் நேற்று (13ம் தேதி) வரை நடந்தது.
நிறைவு நாளான நேற்று மக்கள் சிந்தனைப் பேரவை தலைவர் ஸ்டாலின் குணசேகரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- இந்த ஆண்டு ஈரோடு புத்தகத் திருவிழாவில் 1,000 தலைப்புகளில் புதிய புத்தகங்கள் வந்திருந்தன. 5 லட்சத்துக்கும் மேற்பட்ட வாசகர்கள் புத்தகத் திருவிழாவிற்கு வந்து சென்றுள்ளனர்.
மழை பாதிப்பு, ஆன்லைன் வர்த்தகம் என பல தடைகள் இருந்தாலும் வரவேற்கத்தக்க அளவில் புத்தக விற்பனை நடந்துள்ளது. சுமார் ரூ.5 கோடி ரூபாய்க்கு மேல் புத்தகங்கள் விற்பனையாகி இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.
மூலப்பொருள் விலை உயர்வு, சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி.) காரணமாக கடந்த ஆண்டுகளை விட இந்த ஆண்டு புத்தகங்கள் விலை அதிகரித்திருந்தது. எனவே புத்தகங்கள், புத்தகத் திருவிழா அரங்குகளுக்கு ஜி.எஸ்.டி. விலக்கு அளிக்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu