ஈரோடு மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 215 மனுக்களை பெற்ற ஆட்சியர்

ஈரோடு மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 215 மனுக்களை பெற்ற ஆட்சியர்
X

பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்று குறைகளைக் கேட்டறிந்த ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா.

Erode District Public Grievance Day ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கட்கிழமை (இன்று) நடைபெற்ற மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 215 மனுக்கள் பெறப்பட்டன.

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கட்கிழமை (இன்று) நடைபெற்ற மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 215 மனுக்கள் பெறப்பட்டன.

ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இக்குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, கணவனால் கைவிடப்பட்டோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, வீட்டுமனைப் பட்டா, வேலைவாய்ப்பு, காவல் துறை நடவடிக்கை, கல்விக்கடன், தொழில் கடன், குடிநீர் வசதி, சாலை வசதி, அடிப்படை வசதிகள் மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து மொத்தம் 215 மனுக்கள் பொதுமக்களிடம் இருந்து வரப்பெற்றன.


பொதுமக்கள் அளித்த பல்வேறு கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சியர் பெற்று உரிய துறை அலுவலர்களிடம் வழங்கி அவற்றின் மீது உடனடி நடவடிக்கை எடுத்திட உத்தரவிட்டார். மேலும், முதலமைச்சர் தனிப்பிரிவு மனுக்கள், அமைச்சர் பெருமக்களின் முகாம் மனுக்கள், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

தொடர்ந்து, இக்கூட்டத்தில் தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் நடத்தப்பட்ட திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியில் வெற்றி பெற்ற 3 மாணவியர்களுக்கு தலா ரூ.15 ஆயிரம் வீதம் ரூ.45 ஆயிரம் பரிசுத்தொகைக்கான காசோலைகளையும் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களையும், செங்குந்தர் பொறியியல் கல்லூரியில் 4 ம் ஆண்டு பயின்று வரும் மாணவி சுஜித்ராவின் தாயாரிடம் மாவட்ட விருப்ப உரிமை கொடை நிதியிலிருந்து ரூ.20 ஆயிரத்துக்கான காசோலையினையும் வழங்கினார்.


இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் சாந்த குமார், சமூக பாதுகாப்புத் திட்ட தனித் துணை ஆட்சியர் ராஜகோபால், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் குமரேஷ், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் தர்மராஜ், மாவட்ட வழங்கல் அலுவலர் ராம்குமார், உதவி ஆணையர் (கலால்) ஜீவரேகா உட்பட அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
ai solutions for small business