/* */

ஈரோடு அரசு அருங்காட்சியகத்தில் தஞ்சாவூர் ஓவியக் கண்காட்சி

Erode news- ஈரோடு அரசு அருங்காட்சியகத்தில் "தரணி போற்றும் தஞ்சாவூர் ஓவியங்கள்" என்ற தலைப்பில் தஞ்சாவூர் ஓவியங்கள் குறித்தக் கண்காட்சி அமைக்கப்பட்டு உள்ளது.

HIGHLIGHTS

ஈரோடு அரசு அருங்காட்சியகத்தில் தஞ்சாவூர் ஓவியக் கண்காட்சி
X

Erode news- தஞ்சாவூர் ஓவியக் கண்காட்சியை பொதுமக்கள் பார்வையிட்ட போது எடுத்த படம்.

Erode news, Erode news today- ஈரோடு அரசு அருங்காட்சியகத்தில் "தரணி போற்றும் தஞ்சாவூர் ஓவியங்கள்" என்ற தலைப்பில் தஞ்சாவூர் ஓவியங்கள் குறித்தக் கண்காட்சி அமைக்கப்பட்டு உள்ளது.

ஈரோடு வ.உ.சி. பூங்கா வளாகத்தில் அரசு அருங்காட்சியகம் செயல்பட்டு வருகிறது. இந்த அருங்காட்சியகத்தில் ஈரோடு மாவட்டத்தில் கண்டெடுக்கப்பட்ட பழங்கால பொருட்கள், கற்சிற்பங்கள், கல்வெட்டுகள், சோழர் கால நாணயங்கள், கை பீரங்கி, பதப்படுத்தப்பட்ட உயிரினங்கள், பழங்குடி மக்கள் பயன்படுத்திய பொருட்கள் போன்ற விலை மதிப்பில்லாத பொருட்கள் காட்சி படுத்தப்பட்டுள்ளன.


மேலும், மாதந்தோறும் சிறப்புக் கண்காட்சியும் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, இந்த மாதம் ‘தரணி போற்றும் தஞ்சாவூர் ஓவியங்கள்’ என்ற தலைப்பில் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த தஞ்சாவூர் ஓவியங்கள் பற்றிய கண்காட்சி நேற்று துவங்கப்பட்டது. இந்த கண்காட்சியில் தஞ்சாவூர் ஓவிங்கள் அரிய சேகரிப்புகள் மற்றும் தஞ்சை பிரகதீஸ்வரர் வரையப்பட்டுள்ள சோழர் காலத்து ஓவியங்களின் புகைப்படங்களும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த கண்காட்சியை பொதுமக்கள் ஆர்வமுடன் வந்து பார்த்து செல்கின்றனர். இந்த கண்காட்சியை பார்க்க வருகை தரும் பொதுமக்களிடம், தஞ்சாவூர் ஓவியங்களின் சிறப்பம்சம், அந்த ஓவியங்கள் வரையப்படும் விதம் குறித்து அருங்காட்சியக காப்பாட்சியர் மற்றும் ஊழியர்கள் விளக்கம் அளித்தனர். இந்த கண்காட்சியானது வருகிற மே மாதம் 20ம் தேதியுடன் நிறைவடைய உள்ளதாக அருங்காட்சியக காப்பாட்சியர் ஜென்சி கூறினார்.

Updated On: 30 April 2024 3:00 AM GMT

Related News