ஈரோடு கொங்கு கலை அறிவியல் கல்லூரியில் டெக் பெஸ்ட் 2024 நிகழ்ச்சி..!

ஈரோடு கொங்கு கலை அறிவியல் கல்லூரியில் டெக் பெஸ்ட் 2024 நிகழ்ச்சி..!
X

கொங்கு கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற டெக் பெஸ்ட் நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட படம்.

ஈரோடு கொங்கு கலை அறிவியல் கல்லூரியின் கணினி மற்றும் தகவல் தொழில் நுட்பத்துறை சார்பில், டெக் பெஸ்ட்-2024 நிகழ்ச்சி நேற்று (13ம் தேதி) நடைபெற்றது.

ஈரோடு கொங்கு கலை அறிவியல் கல்லூரியின் கணினி மற்றும் தகவல் தொழில் நுட்பத்துறை சார்பில், டெக் பெஸ்ட்-2024 (Tech Fest 2024) நிகழ்ச்சி நேற்று (13ம் தேதி) நடைபெற்றது.


இந்த நிகழ்ச்சியில், குறும்படம் தயாரித்தல், கலைத்திறன் போட்டி, கணினி குறியீடு பிழைத்திருத்தம், வினாடி வினா, கணினி மென்பொருள் கொண்டு படம் வரைதல், புதையல் வேட்டை போட்டி போன்ற பல்வேறு போட்டிகள் நடைபெற்றது.


கல்லூரியில் பயிலும் பிற துறையைச் சேர்ந்த மாணவர்களுக்கு இப்போட்டிகளைக் கணினி மற்றும் தொழில் நுட்பத்துறை சார்ந்த ஆசிரியர்களும், தன்னார்வ மாணவர்களும் ஒருங்கிணைத்து நடத்தினர். கல்லூரி துறைத்தலைவர் எஸ்.முருகானந்தம் வரவேற்புரை வழங்கினார். கோவை டாக்டர் என்.ஜி.பி. கலை அறிவியல் கல்லூரியின் தகவல் தொழில் நுட்பத் துறையைச் சார்ந்த உதவிப் பேராசிரியை கே.பானுரூபா சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.


அவர், மாணவர்கள் தங்கள் துறை சார்ந்த பாடங்களில் அடிப்படைக் கருத்துக்களை நன்றாக தெரிந்து வைத்திருப்பதன் அவசியத்தையும், பல்வேறு திறன்களை எவ்வாறு வளர்த்துக்கொள்ள வேண்டும் என்றும் விளக்கவுரை அளித்தார்.


கல்லூரியின் முதல்வர் ஹெச்.வாசுதேவன் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்குப் பரிசுகள் வழங்கினார். வெற்றி பெற்ற மாணவ மாணவிகளைக் கல்லூரியின் தாளாளர் பி.டி.தங்கவேல் பாராட்டினார். இந்நிகழ்ச்சியின் முடிவில் ஒருங்கிணைப்பாளர் உதவிப் பேராசிரியர் சி.கலைவாணி நன்றியுரை வழங்கினார்.

Tags

Next Story
வெப்சைட் ஓபன் பண்ண தெரியலையா? இதோ ஈஸியா கத்துக்கோங்க!