ஈரோடு, கோபியில் சாலை மறியலில் ஈடுபட முயன்ற ஆசிரியர்கள் கைது

ஈரோடு, கோபியில் சாலை மறியலில் ஈடுபட முயன்ற ஆசிரியர்கள் கைது
X

Erode news - தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயங்களின் கூட்டமைப்பு நடவடிக்கைகுழு சார்பில் பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தி ஈரோடு காளை மாட்டு சிலை அருகே சாலை மறியலில் ஈடுபட முயன்ற ஆசிரியர்கள்.

Erode news- அரசாணை 243ஐ ரத்து செய்ய வலியுறுத்தி ஈரோடு, கோபியில் சாலை மறியலில் ஈடுபட முயன்ற ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டனர்.

Erode news, Erode news today- அரசாணை 243ஐ ரத்து செய்ய வலியுறுத்தி ஈரோடு, கோபியில் சாலை மறியலில் ஈடுபட முயன்ற ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டனர்.

தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவான டிட்டோஜாக் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாநில முழுவதும் கலந்தாய்வு நடைபெறும் மையங்களில் முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


அந்த வகையில், ஈரோடு காளை மாடு சிலை அருகில் மாநகராட்சி பள்ளி முன்பு ஈரோடு டிட்டோஜாக் அமைப்பின் சார்பில் மாநில ஒருங்கிணைப்பாளர் முத்துராமசாமி தலைமையில் 200க்கும் மேற்பட்ட ஆசிரியர் - ஆசிரியைகள் தமிழக அரசு அரசாணை 243ஐ திரும்ப வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.

அப்போது, பள்ளிக்கல்வித்துறை சார்பில் வெளியிடப்பட்ட அரசாணை 243-னால் தொடக்கல்விதுறையில் பணியாற்றும் பெண் ஆசிரியர் பதவி உயர்வு மற்றும் முன்னுரிமையில் பாதிக்கும் என்பதால் அரசாணை திரும்ப பெற வேண்டும். அதுவரை பொது கலந்தாய்வு அட்டவணையினை மாற்றி அமைத்து ஒன்றிய அளவில் மட்டும் கலந்தாய்வு நடத்த வேண்டும் என வலியுறுத்தினர்.

இதையடுத்து தடையை மீறி மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற டிட்டோஜாக் அமைப்பினரை காவல்துறையினர் கைது செய்தனர். இந்த சம்பவத்தால் போக்குவரத்து சிறிது நேரம் பாதிப்பு ஏற்பட்டது.


அதேபோல், கோபிசெட்டிபாளையத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் ஒன்றிணைந்து, கோபி மாவட்ட கல்வி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டு சாலை மறியலில் ஈடுபட முயன்றனர்.

அனுமதியின்றி சாலை மறியல் செய்ய முயன்றவர்களை கோபி போலீசார் கைது செய்து தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர்.

Tags

Next Story
மழைக்காலங்களில் மின்சார ஷாக்...! எப்படி தவிர்ப்பது..?