ஈரோடு மாவட்டத்தில் சுதந்திர தின நாளில் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு
சுதந்திர தின நாளில் டாஸ்மாக் கடைகள் விடுமுறை (பைல் படம்).
ஈரோடு மாவட்டத்தில் சுதந்திர தின நாளில் அனைத்து அரசு டாஸ்மாக் மதுபானக் கடைகள் மற்றும் தனியார் மதுபானக் கூடங்கள் மூடப்பட வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டத்தில் நாளை மறுநாள் (15ம் தேதி) வியாழக்கிழமை சுதந்திர தினத்தை முன்னிட்டு, அரசு மதுபானக் கடைகள், அதனுடன் இயங்கும் மதுக்கூடங்கள் மற்றும் எப்.எல்.2, எப்.எல்.3 மதுபான விடுதிகள், ஹோட்டல்களில் உள்ள பார்கள் ஆகியவை மேற்கண்ட தினத்தில் மூடப்பட வேண்டும். அன்றைய தினத்தில் மது விற்பனை இல்லாத நாளாக அனுசரிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, வரும் 15ம் தேதி (நாளை மறுநாள்) முழுவதும் ஈரோடு மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அரசு மதுபானக் கடைகள், அதனுடன் இயங்கும் மதுக்கூடங்கள் மற்றும் எப்.எல்.2, எப்.எல்.3 மதுபான உரிம தலங்கள் மூடப்பட்டிருக்கும். அன்றைய தினத்தில் மதுபான விற்பனைகள் ஏதும் நடைபெறாது. அன்றைய தினம் மது விற்பனையில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu