ஈரோட்டில் இன்று தமிழ் மாநில காங்கிரஸ் பிரமாண்ட பொதுக்கூட்டம்

ஈரோட்டில் இன்று தமிழ் மாநில காங்கிரஸ் பிரமாண்ட பொதுக்கூட்டம்
X

ஈரோடு மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பு.

காமராஜர் பிறந்தநாள் விழாவையொட்டி, ஈரோட்டில் இன்று (சனிக்கிழமை) நடைபெறும் பொதுக்கூட்டத்தில் தமாகா மாநில தலைவர் ஜி.கே.வாசன் பங்கேற்று பேசுகிறார்.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் காமராஜரின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் ஈரோடு ஒருங்கிணைந்த தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில், பிரமாண்டமாக கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஈரோடு திண்டல் அருகே உள்ள வேளாளர் மருத்துவமனை வளாகத்தில் இன்று (சனிக்கிழமை ) மாலை 4 மணி அளவில் நடக்க உள்ள இந்த பொதுக்கூட்டம் சிறப்பான முறையில் நடக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் மூத்த நிர்வாகிகள் தலைவர்கள் முன்னாள் எம்பிக்கள் முன்னாள் எம்எல்ஏக்கள் உள்பட பலர் கலந்து கொள்கிறார்கள்.

இதுதொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் மாநில பொதுச் செயலாளர் விடியல் சேகர், மாநில இளைஞரணி தலைவர் யுவராஜ், மத்திய மாவட்ட தலைவர் விஜயகுமார், மாநில பொதுக்குழு உறுப்பினர் சந்திரசேகர், மாநில துணைத்தலைவர் ஆறுமுகம் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். பொதுக்கூட்டத்தை ஒட்டி இளைஞரணி சார்பில், காமராஜர் ஜோதி விருது நகரில் இருந்தும் மூப்பனார் ஜோதி தஞ்சையில் இருந்தும் கொண்டு வரப்படுகிறது. தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே வாசன் விழா மேடையில் இந்த ஜோதிகளை பெற்று கொள்கிறார். இந்த பொதுக்கூட்டத்தில் தமிழ் நாடு முழுவதும் இருந்து சுமார் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொண்டர்கள் கலந்துகொள்ள உள்ளனர்.

இதுபற்றி மாநில பொதுச் செயலாளரும் முன்னாள் எம்எல்ஏவுமான விடியல் சேகர் நிருபர்களிடம் கூறியதாவது, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் மாநில அளவிலான காமராஜரின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் பிரம்மாண்டமான முறையில் ஈரோட்டில் (இன்று) 15-ம் தேதி மாலை நடக்கிறது தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் வலிமையை நிரூபிக்கும் வகையில் இந்த பொதுக்கூட்டம் அமையும். மறைந்த தந்தை பெரியார், பச்சைத்தமிழன் காமராஜரை கெட்டியாக பிடித்து கொள்ளுங்கள் என்று கூறினார். அந்த பெரியாரின் மண்ணில் காமராஜர் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடப்பது பொருத்தமானதாக இருக்கும். வருகிற பாராளுமன்றத் தேர்தலுக்கு இந்த பொதுக்கூட்டம் கால்கோல் விழாவாக அமையும். இவ்வாறு அவர் கூறினார்.

இன்று மாலை பொதுக்கூட்டம் நடப்பதால் மேடை அமைக்கும் பணி கடந்த சில நாட்களாக வேகமாக நடந்து வருகிறது. மேலும் வழி நெடுகிலும் கட்சி கொடிகள் தோரணங்கள் கட்டப்பட்டு உள்ளன. ஜி.கே வாசனை வரவேற்று பல்வேறு இடங்களில் பிளக்ஸ் போர்டும் வைக்கப்பட்டு உள்ளன.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்