ஈரோடு மாவட்டத்தில் பெட்ரோல் நிலையம் அமைக்க தாட்கோ கடனுதவி
பெட்ரோல் நிலையம் (கோப்புப் படம்).
ஈரோடு மாவட்டத்தில் தமிழ்நாடு ஆதிதிராவிடா் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலம் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின வகுப்பைச் சாா்ந்தவா்கள் பெட்ரோல் விற்பனை நிலையம் அமைக்க குறைந்த வட்டியில் கடன் வழங்கப்படும் என தாட்கோ மேலாண்மை இயக்குநர் கந்தசாமி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து தாட்கோ மேலாண்மை இயக்குநர் கந்தசாமி செவ்வாய்க்கிழமை (இன்று) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:-
பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினத்தை சார்ந்தவர்கள் பெட்ரோல் நிலையம் அமைக்க விண்ணப்பதாரர்களுக்கு தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) சார்பாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின வகுப்பைச் சார்ந்த நபர்களுக்கு தாட்கோ மூலம் குறைந்த வட்டியில் கடன் வழங்கப்படும்.
இத்திட்டத்தில் பயன்பெற www.petrolpumpdealerchayan.in என்ற இணையதளத்தில் 18 வயது முதல் 60 வயது வரை உள்ள ஆண், பெண் அனைவரும் வரும் 27ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். பெட்ரோலியம் நிறுவனத்தின் முலம் தேர்ந்தெடுக்கப்படும் தகுதி வாய்ந்த விண்ணப்பதார்களுக்கு அவர்கள் முதல் முறையாக கொள்முதல் செய்யும் பெட்ரோல், டீசல் (ஒரு டேங்கர்) தொகையினை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தைச் சார்ந்தவர்களுக்கு குறைந்த வட்டியில் தாட்கோ மூலமாக கடனாக வழங்கப்படும்.
பாரத் பெட்ரோலியம் லிமிடெட் மூலமாக தேர்ந்தெடுக்கப்படும் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் தாட்கோ தலைமை அலுவலக மாநில திட்ட மேலாளர் (திட்டங்கள்) கைபேசி எண்ணில் 7358489990 தொடர்பு கொள்ளலாம். மேலும், தொடர்புக்கு மாவட்ட மேலாளர், தாட்கோ, 6-வதுதளம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், ஈரோடு என்ற முகவரியிலும், 0424-2259453 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu