பவானிசாகர் சட்டமன்றத் தொகுதி தேர்தல் பணி விவரங்கள் குறித்து தேர்தல் மேற்பார்வையாளர்கள் ஆய்வு

Erode news- பவானிசாகர் தொகுதி தேர்தல் தொடர்பான பணி விவரங்கள் குறித்த ஆய்வுக் கூட்டம் ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.
Erode news, Erode news today- பவானிசாகர் சட்டமன்றத் தொகுதி தேர்தல் தொடர்பான பணி விவரங்கள் குறித்து நீலகிரி நாடாளுமன்றத் தொகுதி தேர்தல் மேற்பார்வையாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.
நாடாளுமன்றப் பொதுத் தேர்தல் 2024 நடைபெறுவதையொட்டி, ஈரோடு மாவட்ட சட்டமன்றத் தொகுதிகளுக்கும், நீலகிரி பாராளுமன்ற தொகுதிக்கும் உட்பட்ட பவானிசாகர் சட்டமன்றத் தொகுதி விவரங்கள் குறித்தும், தேர்தல் தொடர்பான பணி விவரங்கள் குறித்த ஆய்வு கூட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஈரோடு மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான ராஜ கோபால் சுன்கரா நீலகிரி நாடாளுமன்றத் தொகுதிக்கான பொது மேற்பார்வையாளர் மஞ்சித் சிங் ப்ரார், செலவின மேற்பார்வையாளர் சந்தீப் குமார் மிஸ்ரா ஆகியோர் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தின் போது ஈரோடு மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான ராஜ கோபால் சுன்கரா தெரிவித்ததாவது, நீலகிரி நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பவானிசாகர் சட்டமன்ற தொகுதியில் தற்போது 2,60,384 வாக்காளர்கள் உள்ளனர் எனவும், 295 வாக்குச்சாவடி மையங்கள் அமைந்துள்ளன. இதில், 9 வாக்குச்சாவடிகள் சமூக மற்றும் பொருளாதார காரணிகளால் பாதிக்கப்படக்கூடிய வாக்குச்சாவடிகளாக (வல்னரபிள் போலிங் ஸ்டேசன்ஸ்) கண்டறியப்பட்டுள்ளன.
மொத்தமுள்ள வாக்குச்சாவடிகளில் 146 வாக்குச்சாவடிகள் இணையவழி நேரடி ஒளிபரப்பு மூலம் கண்காணிக்கப்பட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் தேர்தல் நேர்மையாகவும், பொதுமக்கள் அச்சமின்றி வாக்கு அளிக்க ஏதுவாக 5 பறக்கும்படை குழுக்கள், 4 நிலைக் கண்காணிப்புக் குழுக்கள் மற்றும் 2 வீடியோ கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு 24 மணிநேரமும் தொடர் கண்காணிப்பில் இருந்து வருகின்றது. மேலும், 5 மாநில எல்லை சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டு தேர்தல் விதிமீறல்கள் ஏதும் நிகழா வண்ணம் கண்காணிக்கப்பட்டு வருகின்றது. பொதுமக்கள் வாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்து ஏற்படுத்தப்பட்ட விழிப்புணர்வு நடவடிக்கை குறித்தும் எடுத்துரைத்தார்.
தொடர்ந்து, நீலகிரி நாடாளுமன்றத் தொகுதிக்கு நியமிக்கப்பட்ட பொது மேற்பார்வையாளர் மஞ்சித் சிங் ப்ரார் தெரிவிக்கையில், பறக்கும் படை உள்ளிட்ட குழுக்கள் மூலம் கண்காணிப்பை தீவிரபடுத்தவும், சோதனை சாவடிகளில் கண்காணிப்பை தீவிரபடுத்தவும், பறக்கும்படை உள்ளிட்ட குழுக்கள் தேர்தல் ஆணைய வழிகாட்டுதலின்படி ஆவணங்களை முறையாக பராமரிக்கவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
அதனைத் தொடர்ந்து, நீலகிரி நாடாளுமன்றத் தொகுதிக்கு நியமிக்கப்பட்ட செலவின மேற்பார்வையாளர் சந்தீப் குமார் மிஸ்ரா தெரிவித்ததாவது, வங்கிகளில் சந்தேகத்திற்கிடமான பரிவர்த்தணை குறித்து தொடர் கண்காணிப்பு மேற்கொண்டு அறிக்கை அளிக்கவும், பிரபல வேட்பாளர்கள், கட்சி பிரமுகர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களின் வங்கி பரிவர்த்தணைகள் குறித்து கண்காணிக்கவும், கட்சி பிரமுகர்கள் மற்றும் அவர்களது தொடர்புடையவர்களது வணிக நிறுவனங்கள் மூலம் செய்யப்படும் பரிவர்த்தணைகள் குறித்து கண்காணிக்கவும், ரூ.10,00,000க்கு மேற்பட்ட பணப்பரிவர்த்தணைகள் குறித்து வருமான வரித்துறையின் மூலம் கண்காணிக்கவும், பவானிசாகர் சட்டமன்ற தொகுதியில் செய்தித்தாள்களில் வெளிவரும் தேர்தல் தொடர்பான எதிர்மறை செய்திகள் மற்றும் கட்டண செய்தி குறித்தும் அறிக்கை தாக்கல் செய்யவும், சம்பந்தபட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
இக்கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவஹர், கூடுதல் ஆட்சியருமான (வளர்ச்சி) ஸ்வீப் கண்காணிப்பு அலுவலருமான மணிஷ், மாவட்ட வருவாய் அலுவலர் சாந்த குமார், மாவட்ட வருவாய் அலுவலர் / முதல்வர் (பவானிசாகர் பயிற்சி நிறுவனம்) லதா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்கள் ரகுநாதன் (தேர்தல்), குருநாதன் (கணக்குகள்), பிரேமலதா (நிலம்), வட்டாட்சியர் ரவிச்சந்திரன் (தேர்தல்), உதவி உட்பட வனத்துறை அலுவலர்கள், வணிகவரித்துறை அலுவலர்கள், ஈரோடு மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் மற்றும் ஈரோடு மாவட்ட தேர்தல் தொடர்பான பொறுப்பு அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu