பெருந்துறையில் அரசு முதன்மைச் செயலாளர் ஆய்வு
Erode news- பொன்முடி ஊராட்சியில் மேல்நிலை குடிநீர் தொட்டிகளுக்கு தானியங்கி கருவி பொருத்தப்பட்டு, குடிநீர் விநியோகிக்கும் பணிகளை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அரசு முதன்மைச் செயலாளர் செந்தில்குமார் நேரில் சென்று, பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார். உடன், ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா உள்ளார்.
Erode news, Erode news today- பெருந்துறையில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அரசு முதன்மைச் செயலாளர் செந்தில்குமார் ஆய்வு மேற்கொண்டார்.
ஈரோடு மாவட்டம், பெருந்துறை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட, பொன்முடி ஊராட்சியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அரசு முதன்மைச் செயலாளர் செந்தில்குமார், மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா முன்னிலையில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பில், தானியங்கி நீர் மேலாண்மை திட்டத்தின் கீழ் மேல்நிலை குடிநீர் தொட்டிகளுக்கு தானியங்கி கருவி பொருத்தப்பட்டு, குடிநீர் விநியோகிக்கும் பணிகளை நேரில் சென்று, பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின்போது, பொன்முடி ஊராட்சி சக்கரக்கவுண்டன்பாளையத்தில் 20,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை தொட்டியில் தானியங்கி கருவி பொருத்தப்பட்டுள்ளதை, நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார். பொன்முடி ஊராட்சியில் தானியங்கி நீர் விநியோக கட்டுப்பாட்டுக் கருவிகள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இதன் மூலம் பொன்முடி ஊராட்சியில் உள்ள 9 குக்கிராமங்களுக்கு ஏற்கெனவே உள்ள 10 மேல்நிலை நீர்தேக்கத்தொட்டிகளில் ஊராட்சி நிதி மூலம் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் தானியங்கி நீர் விநியோக கட்டுப்பாட்டுக் கருவிகள் பொருத்தப்பட்டு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இதனால் மேல்நிலை நீர்தேக்கத்தொட்டிகளில் சேகரிக்கப்படும் நீரானது தொட்டியிலிருந்து நிரம்பி வீணாவது முற்றிலும் தடுக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு குடியிருப்புக்கும் தினமும் குறிப்பிட்ட நேரத்தில் தேவையான அளவிற்கு குடிநீர் விநியோகம் சீரான அளவில் நடைபெற்று வருகிறது. குடிநீர் விநியோகம் செய்யப்படும் நேரங்களில் ஏதேனும் நேரம் மாற்றம் இருப்பின் வாட்ஸ் அப் செயலி குரூப் மூலம் அனைவருக்கும் முன்கூட்டியே தகவல் அளிக்கப்படுகிறது. இதனால் குடிநீர் விநியோகம் செய்யப்படும் நேரத்தை முன்கூட்டியே அறிவதன் மூலம் பொது மக்கள் சிரமமின்றி தங்களுக்கு தேவையான குடிநீரை பெற்றுக் கொள்கின்றனர்.
மேலும், தானியங்கி நீர் விநியோக கட்டுப்பாட்டுக் கருவிகள் மூலம் குடிநீர் விநியோகம் செய்வதால் பணிக்கு செல்லும் மகளிர் பெருமளவு நேரத்தை மிச்சப்படுத்தி அலைச்சலின்றி தங்கள் வீடுகளில் குடிநீர் விநியோகத்தை பெற்றுக்கொள்கின்றனர். தானியங்கி நீர் விநியோக கட்டுப்பாட்டுக் கருவிகள் மூலம் குடிநீர் விநியோகம் செய்வதால் மின்சார உபயோகம் பெருமளவு குறைவதாலும், மின்மோட்டார்கள் மற்றும் உபகரணங்கள் பராமரிப்பு செலவீனம் குறைகிறது.
அதனைத் தொடர்ந்து, சுள்ளிபாளையம் ஊராட்சி கூட்டுறவு நகர், வட்டார இயக்க மேலாண்மை அலுவலகத்தில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில், அரசு உதவி பெறும் பள்ளிகளில் முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம் செயல்படுத்துவது குறித்து மைய பொறுப்பாளருக்கான பயிற்சி அளிக்கப்பட்டு வருவதை பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின்போது, தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குநர் ஜார்ஜ் ஆன்டனி மைக்கேல், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை செயற்பொறியாளர் ராமசாமி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) ரமேஷ் உட்பட தொடர்புடைய துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu