கோபிச்செட்டிப்பாளையம் அருகே இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை: போலீசார் விசாரணை
பைல் படம்.
ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள சிறுவலூரை சேர்ந்த புவனேஷ் .இவரது மனைவி சௌமியா. இவர்களுக்கு 9 மாத ஆண் குழந்தை உள்ளது. சௌமியாவுக்கு வலிப்பு நோய் இருந்துள்ளது.
இந்நிலையில் புவனேசின் உறவினர் ஒருவர் சாமி ஆடி சௌமியாவின் நோய் குணமாவதற்கு சௌமியாவின் பெற்றோர் ரூ.50ஆயிரம் செலவு செய்து பூஜை செய்ய வேண்டும் என்றும், அதுவரை சௌமியா, புவனேஷ் ஆகியோரிடம் அவரது பெற்றோர் பேசக்கூடாது என தெரிவித்துள்ளார்.
இதனால், சௌமியாவிடம் அவரது பெற்றோரை கடந்த ஒன்றரை மாதமாக பேச அனுமதிக்கவில்லை. இதனால் மன வேதனை அடைந்த சௌமியா நேற்று வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து சௌமியாவின் தந்தை ராஜன் கொடுத்த புகாரின் பேரில், சிறுவலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu