அந்தியூர் பர்கூர் மலைப்பகுதியில் தொடர் மழையால் உருவான திடீர் அருவிகள்

அந்தியூர் பர்கூர் மலைப்பகுதியில் தொடர் மழையால் உருவான திடீர் அருவிகள்
X

Erode news- அந்தியூர் - பர்கூர் மலைச்சாலையில் தாமரைக்கரையில் உருவான திடீர் அருவியை படத்தில் காணலாம்.

Erode news- ஈரோடு மாவட்டம் அந்தியூர் பர்கூர் மலைப்பகுதியில் பெய்த தொடர் மழை காரணமாக சாலை ஓரத்தில் திடீர் அருவிகள் உருவாகி உள்ளன. இதனை பார்க்க ரம்மியமாக காட்சி அளிக்கிறது.

Erode news, Erode news today- அந்தியூர் பர்கூர் மலைப்பகுதியில் பெய்த தொடர் மழை காரணமாக சாலை ஓரத்தில் திடீர் அருவிகள் உருவாகி உள்ளன. இதனை பார்க்க ரம்மியமாக காட்சி அளிக்கிறது.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே பர்கூர் மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. ஒரு சில இடங்களில் கனமழை கொட்டுகிறது. இதனால் மலைப்பாதை சாலையில் மண் சரிவு ஏற்படுகிறது. இதன் காரணமாக மரங்கள் சாய்ந்து போக்குவரத்து பாதிக்கப்படுகிறது.

இந்த நிலையில் தொடர் மழையால் வனக்குட்டைகள் நிரம்பியுள்ளன. இதனால், காய்ந்து கிடந்த மரம், செடி, கொடிகள் நன்கு வளர்ந்து பச்சை பசேலென காணப்படுகிறது. இதுதவிர பர்கூர் மலைப்பகுதியில் தாமரைக்கரை உள்பட இடங்களில் சிறிய அளவில் திடீர் அருவிகள் உருவாகியுள்ளன.

இவற்றில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. இதனை பார்க்க ரம்மியமாக காட்சி அளிக்கிறது. இந்த அருவிகளை அந்த வழியாக வாகனங்களில் செல்லும் சுற்றுலா பயணிகள் ரசித்து செல்கின்றனர். ஒரு சிலர் தங்கள் செல்போன்களில் படம் மற்றும் வீடியோ எடுத்து செல்கின்றனர்.

Tags

Next Story
Sudden Halt in Pongal Package Distribution at Erode East Ration Shops..!