விளையாட்டு போட்டிகளில் அதிக பதக்கங்கள்: ஈரோடு கொங்கு கல்லூரி மாணவர்கள் சாதனை

விளையாட்டு போட்டிகளில் அதிக பதக்கங்கள்: ஈரோடு கொங்கு கல்லூரி மாணவர்கள் சாதனை
X

போட்டிகளில் பதக்கங்கள் வென்ற மாணவ, மாணவிகளை கொங்கு கலை அறிவியல் கல்லூரி தாளாளர் தங்கவேல், முதல்வர் வாசுதேவன் ஆகியோர் பாராட்டினர்.

ஈரோடு கொங்கு கலை அறிவியல் கல்லூரி மாணவர்கள் விளையாட்டு போட்டிகளில் அதிக பதக்கங்களைப் பெற்று சாதனை படைத்தனர்.

ஈரோடு நஞ்சனாபுரம் கொங்கு கலை அறிவியல் கல்லூரி மாணவர்கள் தேசிய, மாநில, மாவட்ட மற்றும் பல்கலைக்கழக அளவிலான போட்டிகளில் பங்கேற்று அதிகப் பதக்கங்களைப் பெற்றுச் சாதனை படைத்தனர்.

தேசிய அளவில் நடைபெற்ற மினி கால்பந்து போட்டியில் கலந்து கொண்டு ஈரோடு கொங்கு கலை அறிவியல் கல்லூரி இளங்கலை முதலாமாண்டு வணிக நிர்வாகம் (1 BBA) பயிலும் மாணவர் பரத், இளங்கலை இரண்டாமாண்டு வணிக நிர்வாகம் (II BBA) பயிலும் மாணவர் தினகரன் தலா 1 வெண்கலப்பதக்கம் வென்றனர்.

மாநில அளவில் நடைபெற்ற உடற்கட்டமைப்புப் போட்டியில் ஆண்களுக்கான பிரிவில் இளங்கலை இரண்டாமாண்டு ஆங்கிலம் (II B.A English) பயிலும் மாணவர் அசோக், 110 மீட்டர் தடை தாண்டுதல் ஓட்டப் போட்டியில் (110mts Hurdles) இளநிலை அறிவியல் இரண்டாமாண்டு தகவல் தொழில் நுட்பவியல் (II B.Sc. IT) பயிலும் மாணவர் ரோகித் வெள்ளிப்பதக்கம் வென்றனர்.

அதேபோல், உயரம் தாண்டுதல் போட்டியில் இளநிலை அறிவியல் இரண்டாமாண்டு உயிரித்தொழில் நுட்பவியல் (II B.Sc. Bio.Tech.) பயிலும் மாணவர் சிலம்பரசு வெண்கலப் பதக்கம் வென்றார். A Squar மட்டைப்பந்து போட்டியில் வெண்கலமும், Erode Spiker கைப்பந்து போட்டியில் தங்கமும், Kongu Tophy State level போட்டியில் கொங்கு கலை அறிவியல் கல்லூரி அணி சிறப்பாகப் பங்குபெற்று நான்காவது இடத்தைப் பிடித்தது.

இதேபோல், முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவில் செப்டம்பர் 4 முதல் 24 வரை நடந்த விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. இதில் ஈரோடு கொங்கு கலை அறிவியல் கல்லூரி மாணவர்கள் சிறப்பாகப் பங்கேற்று தங்கம் 6, வெள்ளி 4, வெண்கலம் 2 உள்பட மொத்தம் 12 பதக்கங்களை வென்றனர். கிரிக்கெட் மற்றும் வாலிபால் போட்டிகளில் ஆண்களுக்கான பிரிவில் தலா 1 தங்கமும் கால்பந்துப் போட்டியில் பெண்களுக்கான பிரிவில் தங்கமும் வென்றனர்.

நீச்சல் போட்டியில் ஆண்களுக்கான பிரிவில் தங்கமும் வெண்கலமும் பெண்களுக்கான பிரிவில் தங்கமும், வெள்ளியும் வென்றனர். டேபிள் டென்னிஸ் போட்டியில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான பிரிவுகளில் தலா 1 வெள்ளியும் வென்றனர். கால்பந்துப் போட்டியில் ஆண்களுக்கான பிரிவில் வெண்கலம் வென்றனர். தடகளத்தில் பெண்களுக்கான் பிரிவில் தங்கமும் வெள்ளியும் வென்றது.

மாவட்ட அளவில் 22nd Erode District Athletic Meet ல் 100மீட்டர் ஓட்டப் போட்டியில் இளங்கலை இரண்டாமாண்டு வணிகவியல் (II B.Com) பயிலும் மாணவி வர்ஷா தங்கமும் 200மீட்டர் ஓட்டப்போட்டியில் இளங்கலை முதலாமாண்டு வணிகவியல் (I B.Com.) பயிலும் மாணவி அக்ஷயா வெண்கலமும் வென்றனர்.

மேலும், பாரதியார் பல்கலைக்கழக அளவில் நடைபெற்ற ஆண்களுக்கான டேபிள் டென்னிஸில் வெள்ளி வென்றனர். D Zone கால்பந்து ஆண்களுக்கான பிரிவில் தங்கம் வென்றனர். கல்லூரியின் உடற்கல்வி இயக்குநர் முனைவர் கா.மு.பிரகாஷ்ராஜ் மற்றும் உதவி உடற்கல்வி இயக்குநர் இரா.ஜெகதீஸ்வரி ஆகியோர்களின் துணையுடன் வெற்றி பெற்ற வீரர்களைத் தாளாளர் பி.டி.தங்கவேல், முதல்வர் முனைவர் எச்.வாசுதேவன், பேராசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் அனைவரும் பாராட்டி வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

Tags

Next Story