ஈரோடு: கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சி மாணவ, மாணவிகளுக்கு அழைப்பு

ஈரோடு: கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சி மாணவ, மாணவிகளுக்கு அழைப்பு
X

கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சி.

ஈரோட்டில் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் முழு நேர கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சியில் சேர மாணவ, மாணவிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஈரோட்டில் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் முழு நேர கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சியில் சேர மாணவ, மாணவிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஈரோடு மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்தின் ஓர் அங்கமாக செயல்படும் ஈரோடு கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் 2024-25ம் கல்வியாண்டில் நடைபெற உள்ள கூட்டுறவு மேலாண்மை முழு நேர பட்டயப் பயிற்சிக்கு மாணவ, மாணவியர் சேர்க்கைக்கு வரும் ஏப்ரல் 29ம் தேதி முதல் முன்பதிவு துவங்க உள்ளது. இப்பயிற்சியில் சேர்வதற்கு விருப்பம் உள்ளவர்கள் www.tncuicm.com என்ற இணையதளத்தில் வெளியிடப்படும் நிபந்தனைகளின் படி விண்ணப்பிக்க வேண்டும்.

கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சி உத்தேசமாக வரும் செப்டம்பர் முதல் துவங்கி நடைபெறும். பயிற்சி காலம் ஓராண்டு ஆகும். இரண்டு பருவ முறைகளில் பயிற்சி நடைபெறும். பயிற்சிக்கான பாடத்திட்டம் தமிழில் மட்டுமே நடத்தப்படும். பயிற்சியில் சேர்வதற்கு www.tncuicm.com என்ற இணையதளத்தில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். பயிற்சியில் சேர்வதற்கு விண்ணப்பிப்பதற்கான தேதி மற்றும் பயிற்சிக் கட்டண விவரங்கள் விரைவில் வெளியிடப்படும்.

கூடுதல் விவரங்களுக்கு எண்.5, வாய்க்கால் மேடு, கொங்கம்பாளையம் பிரிவு, சித்தோடு, ஈரோடு 102 என்ற முகவரியில் செயல்படும் ஈரோடு கூட்டுறவு மேலாண்மை நிலையத்தை நேரிலோ, கைப்பேசி எண்.7338720704, 9698342166 மூலமாகவோ அல்லது மின்னஞ்சல் முகவரி icmerode.gmail.com தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags

Next Story
டெல்லி டூ அமெரிக்கா அரை மணி நேரத்துலயா? என்னப்பா சொல்ற எலான் மஸ்க்..! | Delhi to America Flight Timings