ஈரோடு கொங்கு கலை அறிவியல் கல்லூரியில் மாணவ பொறுப்பாளர் நிறுவல் நிகழ்ச்சி..!

ஈரோடு கொங்கு கலை அறிவியல் கல்லூரியில் மாணவ பொறுப்பாளர் நிறுவல் நிகழ்ச்சி..!
X

அலுவலக பொறுப்பாளர்கள் நிறுவல் நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட படம்.

ஈரோடு கொங்கு கலை அறிவியல் கல்லூரியில் மாணவர் அலுவலக பொறுப்பாளர் நிறுவல் நிகழ்ச்சி நேற்று (15ம் தேதி) நடைபெற்றது

ஈரோடு கொங்கு கலை அறிவியல் கல்லூரியின் கணினி மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை சார்பில், 2024-2025ம் ஆண்டிற்கான மாணவர் அலுவலக பொறுப்பாளர் நிறுவல் நிகழ்ச்சி நேற்று (15ம் தேதி) நடைபெற்றது.


கல்லூரியின் தாளாளர் பி.டி.தங்கவேல் பொறுப்பேற்றுக் கொண்ட மாணவர்களுக்கு வாழ்த்துத் தெரிவித்தார். விழாவை, கல்லூரி முதல்வர் ஹெச்.வாசுதேவன் துவக்கி வைத்தார். துறைத் தலைவர் எஸ்.முருகானந்தம் துறையின் 2024-2025ம் கல்வியாண்டு திட்டத்தை வெளியிட்டார்.

துறையின் இணைப் பேராசிரியர் ஆர்.ரூபா வரவேற்றார். பின்னர், அலுவலக பொறுப்பாளர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். சிறப்பு விருந்தினராக மைக்ரோ மென்பொருள் நிறுவனத்தை சேர்ந்த பி.பிரவீன் குமார் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.


அப்போது, மாணவர்கள் அணுகுமுறை, தன்னம்பிக்கை, சொல்வன்மை, திட்டமிடல் மற்றும் செயல்திறன் ஆகியவற்றின் முக்கியத்துவம் அனுபவத்தோடு எடுத்துக் கூறி, மாணவர்களின் சந்தேகங்களுக்கு பதிலளித்தார்.

மேலும், இக்கல்லூரியில் கணினி மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறையில் பயின்ற முன்னாள் மாணவரே சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. நிகழ்ச்சியின் நிறைவாக உதவிப் பேராசிரியர் சி.இந்திராணி நன்றியுரை வழங்கினார்.

Tags

Next Story
ஆள் இல்லாமலே இயங்கும் விமானம்,அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு