அறச்சலூர் நவரசம் மகளிர் கல்லூரியில் மாணவர் கலைத் திருவிழா

Erode news- நவரசம் மகளிர் கல்லூரியில் நடைபெற்ற கலைத் திருவிழாவில் எடுக்கப்பட்ட படம்.
Erode news, Erode news today- அறச்சலூர் நவரசம் மகளிர் கல்லூரியில், அனைத்துக் கல்லூரி மாணவ - மாணவிகளுக்கான கலை விழாப் போட்டி நடைபெற்றது.
ஈரோடு மாவட்டம் அறச்சலூர் நவரசம் மகளிர் கல்லூரியில், அனைத்துக் கல்லூரி மாணவ - மாணவிகளுக்கான கலை விழாப் போட்டி நடைபெற்றது. இவ்விழாவிற்கு கல்லூரியின் பொருளாளர் பழனிசாமி தலைமை தாங்கினார். முதல்வர் செல்வம் அனைவரையும் வரவேற்றார். செயலாளர் செந்தில்குமார் துவக்க உரையாற்றினார். தி நவரசம் அகடாமி பள்ளியின் தாளாளர் அருண் கார்த்திக் வாழ்த்துரை வழங்கினார். இந்த விழாவில், 35 கல்லூரிகளில் இருந்து 500 மாணவ மாணவிகள் பங்கேற்றனர்.
பாட்டு, நடனம், பேச்சு, ஓவியம் போன்ற பல்சுவை போட்டிகளில் முதலாவது இடத்தை மெட்டலா லயோலா கல்லூரியும், இரண்டாவது இடத்தை தாராபுரம் மகாராணி கல்லூரியும், மூன்றாவது இடத்தை அவிநாசிபாளையம் பெர்ஃப்ஸ் அகடாமி கல்லூரியும் பெற்றனர். போட்டிகளில் வென்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகளையும் சான்றிதழ்களையும் வெற்றிக் கோப்பைகளையும் சிறப்பு விருந்தினர் உக்ரைன் நாட்டைச் சேர்ந்த கல்விச் சிந்தனையாளர், கொங்கு நாட்டு கலைப்பண்பாட்டு ஆய்வாளர் ஜப்பானிய மொழி பயிற்றுவிப்பாளர், ஆறுமொழிகளில் வல்லுநருமான மரியா கலந்து கொண்டு பரிசுகளை வழங்கிப் பாராட்டி பேசினார்.
நுண்கலை மன்ற பொறுப்பாளர் பேராசிரியர் சியாமளவள்ளி நன்றி கூறினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கவின் கலைக் கழக பொறுப்பாளர் பேராசிரியர் புவனேஸ்வரி ஒருங்கிணைத்தார். கலை விழாப் போட்டிகளில் ஆடிட்டிங் நடனக்கூடக் பயிற்சியாளர் அருண், கல்லூரி உறுப்பினர் நாச்சிமுத்து, வேளாளர் கல்லூரி முனைவர் சுவர்ணலதா, எம்.எஸ்.எம்.இ பயிற்சியாளர் ராஜேஸ்குமார், அனைத்துத் துறைத் தலைவர்கள், துறைப் பேராசிரியர்கள் மற்றும் அனைத்து மாணவிகளும் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu